நள்ளிரவில் சிக்கிய இளம் பெண்ணிடம் போலீஸ் தகாத செயல்! வைரல் வீடியோ!

பெண் ஒருவரை காவலர்கள் சரமாரியாக தாக்கும் வீடியோ காட்சிகள் பார்ப்பவரை மனதை உறைய வைப்பதாக உள்ளது.


அந்த காட்சிகள்  சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி வருகிறது ..

ஃபரிதாபாத் போலீஸ் அதிகாரிகளால் தாக்கப்படும் மற்றும் சில்மிசம் செய்யப்படும் ஒரு பெண்ணின் வீடியோ வெளியானதை அடுத்து இன்று மூன்று சிறப்பு போலீஸ் அதிகாரிகள் மற்றும் 2 தலைமை காவலர்கள் இடைநீக்கம் செய்யபட்டுள்ளனர்.

இது குறித்து பேசிய காவல் துறை அதிகாரி, கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது இந்த வீடியோவை இரண்டு நாட்களுக்கு முன்னதாக பார்த்ததாகவும், இந்த சம்பவம் குறித்து மாநில மகளிர் கமிஷனர் ஹரியானா போலீசில் தகவல் அளித்ததாகவும் கூறியவர்

ஹரியானா காவல்துறையினர் பெண்களுக்கு பாதுகாப்பு சரியான முறையில் அளிக்கபடுவதாக உறுதியளித்தார். சட்டவிரோதமான முறையில் செயல்பட்டால்  சொந்த ஊழியர்களானாலும்  கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டோம் என தெரிவித்தார்..

மேலும் ஃபரிதாபாத் காவல்துறை ஆணையர் சஞ்சய் குமார் தலைமைக் காவலர்கள் Baldev மற்றும் ரோஹித் ஆகியோரை தற்காலிகமாக இடை நீக்கம் செய்யபட்டுள்ள நிலையில், மேலும்  மூன்று SPO கிருஷ்ணன், ஹர்பல் மற்றும் தினேஷ் ஆகியோரைத் விசாரித்தும் வருகின்றனர்.

ஃபரிதாபாத் ஆதர்ஷ் நகர் போலீஸ் நிலையத்தில் இந்திய தண்டனைச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவாகியுள்ளது பாதிக்கப்பட்ட அந்த பெண்ணை தேடி வருகின்றனர்,  அவரது விசாரணைக்கு பின்னர் தான் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க முடியும் ..