ரஜினி வந்தா பரிசுப் பெட்டிக்கு 4வது இடம் தான்! தினகரனுக்கு பீதி கிளப்பும் தங்கம்!

பரிசுப் பெட்டி குஷியில் தினகரன்... ரஜினி வந்தா நாலாவது இடம் என்று டென்ஷனாகும் தங்கதமிழ்செல்வன் என்றாவது ஒரு நாள் எல்லோரும் அ.தி.மு.க.வில் இணைந்துவிடுவோம்,


ஆட்சி அதிகாரத்தில் அமர்ந்துவிடுவோம் என்ற கனவில் தான் சசிகலா ஆதரவாளர்கள் தினகரன் பக்கம் உறுதியாக நின்றார்கள். அதற்கான பலனை நன்றாகவே அனுபவித்தார்கள். இப்போது அவர் அ.ம.மு.க.வை அரசியல் கட்சியாக பதிவு செய்துவிட்டார். அதன் பலனாக உடனடியாக பரிசுப்பெட்டி சின்னம் கிடைத்துவிட்டது. இதுதான் நம்ம கட்சியின் பவர் என்று தினகரன் கொண்டாடி வருகிறார். ஆனால், அவரது ஆதரவாளர்களும் நிர்வாகிகளும் அத்தனை சந்தோஷமாக இல்லை என்பதுதான் உண்மை.

தங்கதமிழ்செல்வன் கட்சியில் முக்கியமான இடத்தில் இருப்பதாக சொல்லப்பட்டாலும், தினகரனுடன் இணக்கமாக இல்லை என்பதுதான் உண்மை. ஏனென்றால், தினகரன் தன்னை திட்டமிட்டு தோற்கடிக்க வேலை பார்த்ததாக நினைக்கிறார். ஆண்டிப்பட்டி தொகுதி இடைத்தேர்தலில் நின்றிருந்தால் தங்கதமிழ்ச்செல்வன் நிச்சயம் வெற்றி அடைந்திருப்பார். ஆனால் வேண்டுமென்றே அவரை ஆண்டிப்பட்டி தொகுதியில் நிறுத்தினார் தினகரன். அதனால் கையில் இருந்த காசு போனதுடன் ஜெயிக்கும் வாய்ப்பும் போய்விட்டது.

சசிகலாவின் ஆதரவாளர் என்று கெத்தாக பேசிய தங்கதமிழ்செல்வனுக்கு சிக்கல் தருவதற்காக, திட்டமிட்டே தினகரன் இப்படி நிறுத்தியதாக வருத்தப்படுகிறாராம் இப்போது.  இதைவிட, எப்படியாவது தாய்க் கழகத்தில் இணைந்துவிடலாம் என்று நம்பினோம். இப்போது அதுவும் போய்விட்டது.

இனிமேல் அ.ம.மு.க. எப்போதும் மூன்றாவது கட்சியாகத்தான் திகழ முடியும். அதுவும் அடுத்து ரஜினி வந்துட்டால் நான்காவது கட்சிதான். இதுக்குத்தான் இப்படியெல்லாம் பதவி இழந்து அவஸ்தைப்பட்டோமா என்று புலம்புகிறாராம்.

பரிதாபம்.