ஆசை ஆசையாக காதல்! ஆனந்த திருமணம்! ஆனால் 4 மாதங்களில் உயிரை விட்ட இளம் மனைவி! தூத்துக்குடி திகுதிகு!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கீழநாலுமூலை கிணறு கிராமத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்ட புது மணப் பெண் ஒருவர் 4 மாதத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கணவர், பெற்றோர், உறவினர்கள் மட்டும் அல்லாது கிராம மக்களையும் ஆழ்ந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.


தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கீழநாலுமூலை கிணறு கிராமத்தை சேர்ந்த பிரபாகர் என்பவர் வீரபாண்டி பட்டினம் கிராமத்தை சேர்ந்த ஆஷா என்பரை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்துள்ளார். இந் நிலையில் பிரபாகருக்கும் ஆயிஷாவுக்கும் 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடைபெற்றது.

திருமணம் ஆகி 3 மாதம் வரை புது மணத் தம்பதியின் வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக சென்று கொண்டிருந்தது. 3 மாதத்திற்கு பிறகு பிரபாகர் ஆஷா இடையே மெல்ல மெல்ல பிரச்சனை ஆரம்பித்துள்ளது. ஏதாவது ஒரு பிரச்சனையில் இருவருக்கும் அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை காலை வேலைக்கு சென்று விட்டு மாலையில் வீடு திரும்பிய பிரபாகருக்கு அதிர்ச்சி காத்திருந்ததது. மனைவி ஆஷா வீட்டில் தூக்கில் தொங்கியபடி இருந்ததுதான் அந்த அதிர்ச்சியான செய்தி. இதையடுத்து மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக ஆஷாவின் பெற்றோர் தந்த புகாரில திருச்செந்தூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

ஆஷாவை வரதட்சனை ஏதும் கேட்டு பிரபாகர் கொடுமைப் படுத்தினாரா அல்லது ஆஷாவுக்கு ஏதேனும் தனிப்பட்ட பிரச்சனையா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். காதலிக்கும்போது உலகில் நீயில்லாமல் நானில்லை, நானில்லாமல் நீயில்லை என சினிமா வசனங்கள் பேசி கொஞ்சி கொஞ்சி பேசுகின்றனர்.

வருடக்கணக்காக காதலிக்கும் ஜோடிகளுக்கு திருமணம் ஆன அற்ப நாட்களிலேயே பிரச்சனை ஏன் வருகிறது என்பது இன்றும் புரியாத புதிராகவே உள்ளது. திருமணம் செய்யாமல் இன்னும் சில ஆண்டுகள் காதலித்திருந்தால் ஒருவேளை ஆஷாவின் மரணம் தள்ளிப் போகியிருக்குமோ என்னவோ? ஆசை 60 நாள் மோகம் 30 நாள் என்ற பழமொழிக்கேற்ப ஆசைகள் தீரும்போது ஏற்படும் வெற்றிடம் சில இடங்களில் தகராறாக மாறி விடுகிறது.

காதலிக்கும்போது எப்படி பிரச்சனைகளை பேசி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்கிறோமோ அதே சூத்திரத்தை திருமண பந்தத்திலும் பின்பற்றி இருந்தால் காதல் மீதும் காதலர்கள் மீதும் எதிர்கால சந்ததியினருக்கு மதிப்பு இருந்து கொண்டே இருக்கும். நமக்கு அறிவுரைகளை கேட்பதோடு சரி.