அட்ஜெஸ்ட்மென்டுக்கு ஓகேனா எல்லாம் ஓகே! 48 வயது நடிகைக்கு காம வலை விரித்த இயக்குனர்!

சமீபகாலமாக படங்களில் நடித்து நடிக்க வைக்க ஹீரோயின்களை படுக்கைக்கு அழைக்கும் பழக்கம் அதிகரித்துள்ளது. சினிமா துறையில் இது சகஜம் என்று சொல்லப்பட்டாலும். கடந்த பல ஆண்டுகளாக இந்த அத்துமீறல் நடிகைகளுக்கு அதிகமாக நிகழ்ந்து வருகிறது.


சமீபத்தில் பாடகி சின்மயி கவிஞர் வைரமுத்துவின் மீது இதே குற்றத்தை சுமத்தி இருந்தார். இதனை தொடர்ந்து பலரும் தங்களை யார் யார் படுக்கைக்கு அழைத்தனர் என்று கூறி வருகின்றனர். இந்த பூதாகரமான செய்தி அடங்குவதற்குள் மலையாள நடிகை 48 வயதான சஜிதா, தற்போது தான் சந்தித்த ஒரு இதுபோன்ற சங்கடமான நிகழ்வை விவரித்துள்ளார்.

 இது குறித்து அவர் பேசியதாவது:  தமிழ் சினிமாவில் இருந்து ஒரு உதவி இயக்குனர் எனக்கு போன் செய்தார் . அந்த போன் கடந்த திங்கட்கிழமை வந்தது. அவரது பெயர் கார்த்திக் என்று தன்னை அவரை அறிமுகம் செய்து கொண்டார். படத்தைப் பற்றி பேசி கொண்டே இருந்தவர் திடீரென நீங்கள் ‘அட்ஜஸ்ட்மென்ட்’ மற்றும் ‘அதற்கெல்லாம்’ தயாராக இருக்கிறீர்களா என்று கேட்டார்.

 இப்படி திடீரென கேட்டவுடன் நான் ஷாக் ஆகி விட்டேன். திடீரென ஒருவர் எனக்கு போன் செய்து என்னை படுக்கைக்கு அழைப்பது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மேலும் இதனை நான் சும்மா விட போவதில்லை. அந்த நபர் என்னிடம் மன்னிப்பு கேட்டாலும் நான் மன்னிக்க மாட்டேன் என்று அதிரடியாக பேசியுள்ளார் சஜிதா. சஜிதாவிற்கு தற்போது 48 வயதாகிறது. கடந்த 1980 முதல் படங்களில் நடித்து வருகிறார். இருந்தாலும் இவ்வளவு வயதான பெண்மணி என்றும் பாராமல் அந்த இயக்குனர் இவரை படுக்கைக்கு அழைத்தது பெரும் குற்றமே.