விவாகரத்தான 43 வயது டீச்சருக்கு வந்த சபலம்..! நம்பிச் சென்றவருக்கு அண்ணன் தம்பியால் ஏற்பட்ட பரிதாப நிலை! திருப்பூர் விபரீதம்!

திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி ஆசிரியை கடத்தி சென்று கொடுமைப்படுத்திய சகோதரர்களை காவல்துறையினர் கைது செய்திருப்பது திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள சிங்காநல்லூரை சேர்ந்தவர் சசிகலா. இவருடைய வயது 43. இவர் இருகூர் அரசு மேல்நிலை பள்ளியில் ஓவிய ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவருடைய பருவகால நண்பரின் பெயர் ஆசாத். ஆசாத்தின் வயது 44. இவர் பல்லடத்தில் பணிபுரிந்து வருகிறார்.

சில மாதங்களுக்கு முன்னர் பல்லடத்தில் நடந்த ஒரு விழாவுக்கு சசிகலா சென்றுள்ளார். அப்போது ஆசாதிடம் சசிகலா தனக்கு விவாகரத்தான செய்தியை கூறியுள்ளார். ஆசாத் சசிகலா மீது பரிதாபப்பட்டு அவரை திருமணம் செய்து கொள்வதாக உறுதி அளித்துள்ளார். இதனிடையே கடந்த சில நாட்களாக சசிகலாவால் ஆசாத்தை தொடர்பு கொள்ள இயலவில்லை. 

பின்னர் திடீரென்று ஒருநாள் ஆசாதின் நண்பர் என்று அறிமுகப்படுத்திக்கொண்டு சசிகலாவிடம் மதன் என்ற நபர் பேசியுள்ளார். அவர் ஆசாதுடன் சேர்வதற்கு நீங்கள் ஒரு லட்சம் ரூபாய் தர வேண்டும் என்று கூறியுள்ளார்.

சசிகலா திருமுருகன்பூண்டி பகுதியில் நின்று கொண்டிருந்தார். அப்போது மணிகண்டன், அபுதாஹீர், சசிகுமார் ஆகியோர் சசிகலாவை வலுக்கட்டாயமாக காரில் ஏற்றி சென்றனர். ஆசாத் பற்றி சசிகுமார் கேட்டபோது, பணத்தை கொடு சத்தம் போட்டால் கொலை செய்து விடுவோம் என்று எச்சரித்துள்ளனர்.

அதன் பின்னர் சசிகலாவை மேட்டுப்பாளையம், அன்னூர், கருமத்தம்பட்டி, சின்னியம்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு அழைத்துச் சென்று அவருடைய ஏடிஎம் கார்டில் இருந்து ஒரு லட்சம் ரூபாய் வரை திருடியுள்ளனர். பின்னர் ஏற்றிய இடத்திலேயே சசிகலாவை இறக்கிவிட்டனர்.

சம்பவம் நிகழ்ந்த சில நாட்களான பிறகும் சசிகலாவால் தான் ஏமாற்றப்பட்டதை நம்ப முடியவில்லை. மன உளைச்சலில் இருந்த அவர் அப்பகுதி காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் அபுதாஹிர் மற்றும் அவரது சகோதரரான தஸ்தகீர் ஆகியோர் இந்த குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதை கண்டுபிடித்துள்ளனர்.

உடனடியாக காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்த 40 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்து சசிகலாவிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவமானது திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.