வயது 41..! அந்த இடத்தில் கேன்சர் நோய்..! ஆனாலும் இரட்டைக் குழந்தைகளை பிரசவித்த பெண்! டாக்டர்களையே மிரள வைத்த அதிசய நிகழ்வு! எப்படி தெரியுமா?

லண்டன்: கருப்பை புற்றுநோய் பாதித்த பெண், அதில் இருந்து மீண்டு வந்து, இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்து சாதித்துக் காட்டியுள்ளார்.


இங்கிலாந்தில் உள்ள நோர்ஃபோல்க்பகுதியை சேர்ந்தவர் மிஸ் ஆலன். 41 வயதான இவர், சில ஆண்டுகளுக்கு முன், கருப்பைவாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். அதில் இருந்து மீண்டு வந்தாலும், அவரால் குழந்தை பெற்றுக் கொள்ள முடியாது என்று டாக்டர்கள் தெரிவித்திருந்தனர். எனினும், விடா முயற்சியுடன்  போராடிய ஆலன், கடந்த ஆண்டில் கர்ப்பம் தரித்தார். ஆனால், 34 வாரங்களே ஆன நிலையில், அவருக்கு மீண்டும் புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டதாக தெரியவந்தது. இதையடுத்து, சிசேரியன் செய்து, உயிரை காப்பாற்ற மருத்துவர்கள் தீர்மானித்தனர்.

சிசேரியன் செய்யாவிட்டால் குழந்தை பிறக்கும்போது ஆலன் உயிரிழந்துவிடுவார் என்ற அச்சம் காரணமாக, இப்படி டாக்டர்கள் செய்தனர். இதன்படி, அவருக்கு, கடந்த 2019 ஜூன் அன்று அறுவை சிகிச்சை செய்து, குழந்தைகளை டாக்டர்கள் வெளியே எடுத்தனர். இரட்டைக் குழந்தைகள் உடல்நலத்துடன் இருந்தாலும், ஆலன் உயிருக்கு ஆபத்தான நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டார். அவருக்கு உரிய சிகிச்சை அளித்து, தற்போது அவரது உயிரை டாக்டர்கள் காப்பாற்றி உள்ளனர்.  

எந்த நேரத்திலும் அவர் உயிரிழந்துவிடுவாரோ என்ற அச்சம் காணப்பட்ட நிலையில், ஆலன் தன்னம்பிக்கையை தளரவிடாமல் இருந்து, தற்போது மீண்டு வந்துள்ளார். கர்ப்பம் தரித்தபோதே கருப்பை புற்றுநோய் மீண்டும் ஏற்பட்டிருந்ததை சரியாகக் கவனிக்காமல் விட்டதே இந்த பிரச்னைக்கு காரணம் எனக் கூறும் ஆலன், இனி பயப்பட ஒன்றுமில்லை, என, நம்பிக்கையுடன் தெரிவிக்கிறார்.