85 வயது பெண்ணுடன் வல்லுறவு! 40 வயது நபரின் பாலியல் வக்கிரம்! அதிர்ந்த போலீஸ்!

மகாராஷ்டிர மாநிலத்தில் 85 வயது மூதாட்டியை பாலியல் பலாத்காரம் செய்த 40 வயது நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.


பாலியல்ரீதியாக வினோத ஆசைகளும் வக்கிரங்களும் கொண்ட ஜீவராசிகள் அதிகரித்து வருகின்றன. சின்னஞ்சிறுமிகள், பச்சிளம் குழந்தைகளையும் விட்டு வைக்காத பாலியல் மிருகங்களின் வரிசையில் மகாராஷ்டிர மாநிலம் ஜல்னா மாவட்டத்தில் ஒரு 40 வயது நபரின் வக்கிரம் எதிர்மறான வகையில் திரும்பியிருக்கிறது. 

இந்த முறை பாதிக்கப்பட்டவர் 85 வயது மூதாட்டி. இவர் ஜல்னா மாவட்டத்துக்குட்பட்ட வடோனா என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். தனியாக வசித்து வந்தார். கடந்த திங்கட் கிழமை இரவு இவரது வீட்டுக்குள் புகுந்த அபாசாகேப் தான்புரே என்ற நபர் மூதாட்டியை வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து மறு நாள் காலை மூதாட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து தான்புரேவை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மூதாட்டி மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பிவைக்கப்படுள்ளார்.