அரியலூர் அருகே டிப்பர் லாரி ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இரண்டு பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஒரே பைக்கில் 4 பேர்! லாரியுடன் ரேஸ்! பிறகு நேர்ந்த விபரீதம்!

அரியலூர் மாவட்டத்தில் வி. கைகாட்டி என்னும் கிராமம் அமைந்துள்ளது. இதன் அருகே வெள்ளிப்பிரிங்கியம் எனும் பகுதி அமைந்துள்ளது. சதீஷ் (24), அஜித் (22), கைராம்(22), விக்கி(18) ஆகியோர் வெள்ளிப்பிரிங்கியத்தில் வசித்து வருகின்றனர். இவர்களுடன் மேலும் 2 பேர் நேற்று இரவு இப் பகுதிக்கு அருகே உள்ள கீழப்பழுவூருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளனர். அங்கிருந்து மீண்டும் வெள்ளிப்பிரிங்கியத்திற்கு வந்து கொண்டிருந்தனர்.
திருச்சி - சிதம்பரம் சாலையில் வந்து கொண்டிருந்த போது அதிவேகத்தில் வந்த ஒரு டிப்பர் லாரியை போட்டி போட்டுக் கொண்டு இவர்களது மோட்டார் சைக்கிள் முந்த முயன்ற போது அதன் மீது மோதியது. மோதிய வேகத்தில் இரு மோட்டார் சைக்கிள்களும் பறந்து சென்று உள்ளன. சம்பவ இடத்திலேயே அஜித், சதீஷ், விக்கி ஆகியோர் உயிரிழந்தனர். மோதிய உடனே லாரி டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
கைகாரம் மற்றும் 2 பேரை அரியலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். எதிர்பாராத விதமாக செல்லும் வழியிலேயே கைகாரம் இறந்துவிட்டார். மீதி இருவருக்கும் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவலறிந்த அரியலூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். விபத்தில் சிக்கிய இளைஞர்களின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து காவல்துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பின்னர் விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுனரை கைது செய்ய வேண்டி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் திருச்சி சிதம்பரம் நெடுஞ்சாலையில் வெகு நேரமாக போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. இந்த சம்பவத்தினால் சிதம்பரம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.