4 வயது சிறுமிக்கு அந்த இடத்தில் சூடு வைத்த கொடூர மாமன்! ஆசைக்கு இணங்காததால் வெறிச் செயல்!

மும்பையில் தனது 4 வயது மருமகளை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.


எதைக் கண்டு பாலுணர்வு கொள்வது என்ற வரைமுறையே இல்லாமல் வாழ்ந்து வரும் 2 கால் மிருகங்களின் வரிசையில் மும்பையில் மற்றுமொரு நபர் சிக்கியுள்ளான். போரிவில்லை பகுதியைச் சேர்ந்த தம்பதி வேலைக்குச் சென்றுவிடும் நிலையில் அந்தச்  சிறுமி கணவன் வகைப் பாட்டி வீட்டு உறவுகளின் பராமரிப்பில் இருந்தார். 

இந்நிலையில் வீட்டில் எவரும் இல்லாத போது அந்த சிறுமியின் அத்தை கணவன் அந்தச்  சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சி மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் வேலையில் இருந்து வீடு திரும்பிய சிறுமியின் தாய், அந்தச் சிறுமி சோர்வாக இருந்தது  குறித்த்து விசாரித்தார். 

அப்போது அந்தச் சிறுமி தனது பிறப்புறுப்பைக் காட்டிய போது தீக்காயங்கள் இருந்ததைக் கண்டு அதிர்ந்தார். இதையடுத்து மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது பாலியல் பலாத்கார முயற்சி நடைபெற்றிருப்பதை உறுதிப்படுத்தினர். இது  குறித்து விசாரித்த போது சிறுமி தனது அத்தை கணவனை சுட்டிக் காட்டினாள். 

இதையடுத்து சிறுமியின் தாயின் புகாரின் பேரில் அந்த நபரை கைது செய்தனர். இந்நிலையில் புகாரை வாபஸ்பெறுமாறு அந்தப் பெண்ணின் மாமியார் குடும்பத்தினர் மிரட்டல்  விடுத்த போது அந்தப் பெண் பொருட்படுத்தாதால் அந்த நபர் கம்பியெண்ணிக்கொண்டிருக்கிறான். பாலியல் முயற்சியின் போது சிறுமி தடுத்த காரணத்தினால் அந்த இடத்தில் நெருப்பால் பொசுக்கியுள்ளான் அந்த பாதகன்.