திடீரென மாயமான 4 வயது சிறுவன்! 5 நாள் தேடுதல் வேட்டை! கடைசியில் பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

பெங்களூரு: மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவனின் சடலம், 5 நாட்களுக்குப் பின் மீட்கப்பட்டுள்ளது.


பெங்களூருவில் உள்ள குளோபல் வில்லேஜ் டெக் பார்க்கைச் சேர்ந்தவர் குல்சான். இவரது கணவர்  இம்ரான் ஷரீஃப். சில மாதங்கள் முன்பாக, இம்ரான் டிபி நோயில் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதையடுத்து, தனது 3 மகன்களை மிகவும் சிரமப்பட்டு குல்சான் பராமரித்து வந்தார்.

இதில், மூத்த மகன் முகமது ஜெயின் (4 வயது), சில நாள் முன்பாக, அப்பகுதியில் ஓடும் மழைநீர் கால்வாயில் நிலை தடுமாறி விழுந்துவிட்டான். இதையடுத்து அவனை தீவிரமாக தேடி வந்த போலீசார், 5 நாட்கள் கடந்த நிலையில், தற்போது  மீன்கள் அரித்த நிலையில், சிறுவனின் சடலத்தை மீட்டுள்ளனர்.