மடிப்பு கலையாத சேலை..! தலை நிறைய மல்லிப்பூ..! ஜவுளிக்கடைக்குள் நுழைந்து இந்த பெண்கள் செய்த விபரீத செயல்!

ஆண்கள் ஆடையகத்தில் 4 பெண்கள் ஜீன்ஸ் பாண்டுகளை திருட முயன்ற சம்பவமானது சேலம் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சேலம் மாவட்டத்தில் எடப்பாடி என்னும் பகுதி அமைந்துள்ளது. இங்கு லக்ஸரி என்ற ஆண்கள் ஆடையகம் இயங்கி வருகிறது. இந்த ஆடையகத்தில் 13-ஆம் தேதியன்று 4 பெண்கள் நுழைந்துள்ளனர். அவர்களுள் 2 பேர் ஜீன்ஸ் பான்ட்களை வாங்குவது போன்று கடை ஊழியர்களை திசை திருப்பியுள்ளனர். மற்ற இருவரும் அதனை பயன்படுத்தி கொண்டு 20-க்கும் மேற்பட்ட ஜீன்ஸ் பாண்டுகளை சட்டை பைக்குள் போட்டு திருட முயற்சித்துள்ளனர்.

ஆனால் இவர்களின் செயல்களை எதிர்க்கடை பெண் ஊழியர் ஒருவர் பார்த்து விட்டதால், திருடிய ஜீன்ஸ்களை அங்கேயே விட்டுவிட்டு சென்றுள்ளனர். சம்பவம் குறித்து கடையின் உரிமையாளர் எடப்பாடி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சிசிடிவி கேமரா பதிவுகளில் பதிவாகியுள்ள 4 பெண்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவமானது எடப்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.