ஜே.கே. ரீத்தீஷ் மரணத்து 4 மாதங்கள்! பரிதாப நிலையில் அவரது மனைவி ஜோதீஸ்வரி!

தமிழ் திரையுலகம், அரசியல் உலகம், தொழில் உலகம் என மூன்றிலும் அனைவராலும் அறியப்பட்டதாக இருந்த ஜே.கே.ரித்தீஷின் மனைவி தற்போது பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.


கடுமையான உழைப்பாளி என்று அறியப்பட்டவர் ஜே.கே.ரித்தீஷ். சினிமா, அரசியல் மட்டும் அல்லாமல் தொழில் முறையாகவும் பல்வேறு வெற்றிகளை பெற்றவர் இவர். சென்னையில் இவருக்கு ஏராளமான அசையா சொத்துகள் உண்டு. 

தியாகராயநகரில் பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகளில் இவருக்கு வீடு உண்டு. இதே போல் 3 நட்சத்திர ஓட்டல்கள் சிலவற்றையும் ரித்தீஷ் நடத்தி வந்தார். போதாக்குறைக்கு பைனான்ஸ் தொழிலிலும் ரித்தீஷ் கொடி கட்டி பறந்து வந்தார். 

அவருக்கு ஆதம் பாவா எனும் நண்பர் உண்டு. பெரும்பாலான தொழில் விஷயங்களை பாவா தான் கவனித்து வந்ததாக சொல்கிறார்கள். இந்த நிலையில் பாவா திடீரென தனது வீட்டிற்கு வந்து தன்னை கொலை செய்துவிடுவதாக மிரட்டியதாக ரித்தீஷ் மனைவி ஜோதீஸ்வரி கூறியுள்ளார்.

அதாவது கடந்த ஜனவரி மாதம் சுமார் 25 கோடி ரூபாய் மதிப்புடைய பள்ளிக்கூடம் மற்றும் சில வீடுகளை சுப்ரமணி என்பவரிடம் இருந்து வாங்க ரித்தீஷ் ஒப்பந்தம் போட்டுள்ளார். இதற்காக சுமார் 4 கோடி ரூபாய் வரை சுப்ரமணிக்கு அட்வான்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த ஒப்பந்தம் நிறைவு பெறுவதற்கு முன்னதாக திடீரென ரித்தீஷ் காலமாகிவிட்டார். இதனால் அந்த ஒப்பந்தத்தை முறித்துக் கொள்ள ரித்தீஷீன் மனைவி முடிவு செய்து சுப்ரமணியை அணுகியுள்ளார். மேலும் அட்வான்ஸ் தொகை ரூ.4 கோடியை தன்னிடம் தருமாறும் ஜோதீஷ்வரி கேட்டுள்ளார்.

இதற்கு சுப்ரமணியும் ஒப்புக் கொண்டதாக சொல்கிறார்கள். இந்த நிலையில் தான் ரித்தீஷ் நண்பர் ஆதம்பாவா திடீரென திருவான்மியுர் மற்றும் தியாகராயநகரில் உள்ள தன் வீட்டிற்கு வந்து தனது குழந்தைகள் முன்னிலையில் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக ஜோதீஸ்வரி கூறியுள்ளார்.

சுமார் 25 கோடி ரூபாய் மதிப்புடைய சுப்ரமணியின் சொத்துகளை பாவா அவரது பெயருக்கு மாற்ற முயற்சிப்பதாகவும் அதோடு மட்டும் அல்லாமல் சுமார் 100 கோடி ரூபாய் மதிப்புடைய ரித்தீஷீன் சொத்துகள் மட்டும் தொழில் பங்குகளையும் பாவா அபகரிக்க முயல்வதாகவும் கதறுகிறார் ஜோதீஸ்வரி.

ரித்தீஷ் இருக்கும் வரை கெத்தாக இருந்த வந்த ஜோதீஸ்வரி மீது கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவரது வீட்டு வேலைக்காரர் புகார் அளித்தார். தற்போது ரித்தீஷீன் நெருங்கிய நண்பரே அவரது மனைவிக்கு மிரட்டல் விடுப்பதாக புகார் எழுந்துள்ளது. இதனால் ஜோதீஸ்வரி பரிதாபகரமான நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது.