CRPF வீரர்கள் 44 பேர் கொடூர கொலை! ஐஸ்க்ரீம் சாப்பிட்டு கொண்டாடிய 4 மாணவிகள் கைது!

காஷ்மீரில் தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 44 பேர் கொல்லப்பட்ட நிலையில் அதற்கு மகிழ்ச்சி தெரிவித்து ஐஸ்க்ரீம் சாப்பிட்டு கொண்டாடிய 4 மாணவிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ளது நிம்ஸ் பல்கலைக்கழகம். இந்த பல்கலைக்கழகத்தில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் வந்து ஏராளமான மாணவிகள் தங்கி பயின்று வருகின்றனர்.

இவர்களில் காஷ்மீரை சேர்ந்த தல்வீன் மன்சூர், இக்ரா, ஜோரா நசீர் மற்றும் உஜ்மா நசீர் ஆகியோர் நிம்ஸ் பல்கலைக்கழகத்தில் 2ம் ஆண்டு பயின்று வருகின்றனர். கடந்த 14ந் தேதி காஷ்மீர் புலவாமா தாக்குதலில் சி.ஆர்.பி.எஸ் வீரர்கள் 44 பேர் கொல்லப்பட்டனர்.

இதனை தொடர்ந்து மாணவிகள் நான்கு பேரும் புலவாமா தாக்குதலை தாங்கள் எப்படி கொண்டாடுகிறோம் பாருங்கள் என்று கூறி கைகளில் ஐஸ்க்ரீம் சாப்பிட்டபடி இருக்கும் புகைப்படத்தை தங்களது வாட்ஸ் ஆப் குரூப்களில் சேர் செய்துள்ளனர். இந்த புகைப்படங்களை பார்த்து நிம்ஸ் பல்லைக்கழகத்தில் பெரும் பதற்றம் ஏற்பட்டது.

மேலும் ஜெய்பூர் முழுவதும் இந்த தகவல் பரவியதை தொடர்ந்து நிம்ஸ் பல்கலைக்கழகம் முன்பு ஏராளமானவர்கள் திரண்டு போராட ஆரம்பித்தனர். மாணவிகள் 4 பேரையும் உடனடியாக ஜெய்பூரை விட்டு வெளியேற்ற வேண்டும் என்று அவர்கள் முழக்கம் எழுப்பினர்.

இதனை தொடர்ந்து மாணவிகள் 4 பேரையும் கல்லூரி மற்றும் ஹாஸ்டலில் இருந்து சஸ்பென்ட் செய்வதாக நிம்ஸ் பல்கலைக்கழகம் அறிவித்தது. ஆனாலும் போராட்டம் தொடர்ந்தது. இதனை தொடர்ந்து போலீசார் பல்கலைக்கழகத்திற்கு வந்தனர்.

சிஆர்பிஎஸ் வீரர்கள் மறைவை கொண்டாடும் வகையில் பதிவிட்ட காஷ்மீரை சேர்ந்த தல்வீன் மன்சூர், இக்ரா, ஜோரா நசீர் மற்றும் உஜ்மா நசீர் ஆகியோர் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்தியாவிற்கு எதிராகவும், தீவிரவாதிகளுக்கு ஆதரவாகவும் கருத்து வெளியிட்டதாக கூறி மாணவிகள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்கிறார்கள்.