ஊற்றிக் கொடுத்த டிரைவர்! முழு போதையில் ஸ்கூலுக்கு வந்த 4 மாணவிகள்! வகுப்பறையில் அரங்கேறிய கூத்து!

பள்ளி மாணவிகள் மது போதையில் பள்ளிக்கு வந்த சம்பவமானது மூணாறில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கேரள மாநிலத்தின் மூணாறு எனும் இடம் அமைந்துள்ளது. இதற்கருகே தேவிகுளம் என்ற இடம் அமைந்துள்ளது. அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. மூணாறை சுற்றி நிறைய தேயிலை தோட்டங்களுள்ளன. இங்கு பணியாற்றும் தொழிலாளர்களின் குழந்தைகளும், மூணார் சுற்றுவட்டாரத்தில் வாழ்ந்துவரும் குழந்தைகளும் இந்த பள்ளியில் பயின்று வருகின்றனர்.

நேற்று முன்தினம் பள்ளிக்கு 4 மாணவிகள் வந்துள்ளனர். அவர்கள் தள்ளாடியபடியே வகுப்பறைக்கு வந்தனர். அப்போது அவர்களை விசாரித்தபோது உலறியுள்ளனர். உடனடியாக வகுப்பு ஆசிரியர் அவர்களை பள்ளி முதல்வரிடம் அழைத்து சென்றார். பள்ளி முதல்வர் விசாரணை நடத்திய பிறகு மூணாறு சைட்லைன் அதிகாரியான எட்வின் என்பவரிடம் தகவல் தெரிவித்தனர். மாணவிகளை சந்தித்த பிறகு ஏடுகள் தேவிகுளம் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தார்.

காவல்துறையினர் விரைந்து வந்து மாணவிகளை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்ததில் மாணவிகள் மது அருந்தியது உறுதியானது. அவர்களுக்கு மதுபோதை தெளிந்த பிறகு காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது அவர்கள், மூணாறு பகுதியில் ஆட்டோ ஓட்டும் செல்வா என்ற 20 வயது இளைஞர் தங்களுக்கு வெள்ளை நிறத்தில் ஒரு பானத்தை அளித்து பள்ளிக்கு சென்று குடிக்க சொன்னதாக கூறினார். அவ்வாறே நாங்களும் பள்ளியின் கழிவறைக்கு சென்று அந்த பானத்தை அருந்தினோம். பின்னர் மாணவிகளுக்கு அறிவுரை வழங்கிய பிறகு அவர்களை வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

மாணவிகளுக்கு மது வாங்கி கொடுத்து தலைமறைவாகியுள்ள ஆட்டோ ஓட்டுநர் செல்வத்தை, காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவமானது மூணாறு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.