திருமணமாகி மூன்றே மாதம்..! நடு வீட்டில் சடலமாக தொங்கிய 22 வயது பெண் சாஃப்ட்வேர் என்ஜினியர்..! புதுச்சேரி திகுதிகு!

புதுச்சேரி: திருமணம் முடிந்த 3 மாதத்தில் பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.


புதுச்சேரி அருகே உள்ள இடையன்சாவடியை சேர்ந்தவர் பவானி (22 வயது). பி.ஈ. படித்துள்ள இவர், சென்னையில் உள்ள சாஃப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தார். 3 மாதங்களுக்கு முன்பாக, இவருக்கும், அறிவழகன் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வீட்டின் பின்பக்கமாகச் சென்ற பவானி திடீரென கொல்லைப்புறத்தில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு இறந்துகிடந்தார்.

இதனை பார்த்த அவரது குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். ஆரோவில் பகுதி போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர். திருமணத்திற்கு முன்பு யாரையேனும் பவானி காதலித்து வந்தாரா அல்லது கணவன் வீட்டார் தொல்லையால் இந்த முடிவை எடுத்தாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.