39 வயது நபருக்கு 2வது மனைவியான 26 வயதான பெண் என்ஜினியர்! பிறகு 2 பேரும் சேர்ந்து செய்த விபரீத செயல்!

சென்னையில் 13 வயது மூத்தவரை திருமணம் செய்து கொண்ட பெண் அவருடன் சேர்ந்து வேலை வாங்கித் தருவதாக பல லட்சம் ரூபாய் சுருட்டியது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.


சென்னை புளியந்தோப்பில் ராஜேஷ் என்பவரை 2வது திருமணம் செய்து கொண்ட மோனிகா என்பவர் ஆன்லைன் வர்த்தகம் செய்வதாக கூறி ரூ.15 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்டுள்ளார். மேலும் பலருக்கு வேலை வாங்கித் தருவதாகவும் லட்சக்கணக்கில் பணம் பெற்று கல்லாக் கட்டியது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அரசு வேலை வாங்கித் தருவதாகவும் மோசடியில் ஈடுபட்ட இவர் மீது ஏகப்பட்ட நபர்கள் புகார் அளித்திருந்தனர். இவர்கள் மீது வழக்குப்பதிந்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் இவர்களை தேடிவந்தனர். 

பொறியியல் பட்டதாரியான சென்னை காசிமேட்டை சேர்ந்த மோனிகா கடந்த ஜனவரி மாதம் காணாமல் போய் உள்ளார். பின்னர் தன்னை விட 13 வருடம் மூத்த வயதுள்ள புளியந்தோப்பை சேர்ந்த ராஜேஷ் என்பவரை கரம் பிடித்துள்ளார். உழைத்து வாழ விரும்பாத இருவரும் பலரை மோசடி செய்து சதுரங்க வேட்டை பாணியில் வாழலாம் என முடிவெடுத்துள்ளனர்.

வீட்டில் இருந்து மாயமானதாக பெற்றோர் தந்த புகாரில் மோனிகாவை தேடி வந்த நிலையில் அவர்கள் செய்த சட்ட விரோத செயல்கள் வெளிச்சத்திற்கு வந்து இருவரும் சிறைக் கம்பிகளுக்கிடையே குடித்தனம் நடத்தி வருகின்றனர். எத்தனை ஏமாற்று பேர் வழிகள் குறித்து விழிப்புணர்வு தரும் வகையில் செய்திகள் ஊடகங்களில் வந்தாலும் மக்கள் மீண்டும் மீண்டும் இதுபோன்ற ஆசாமிகளை நம்பி ஏமாந்தது குறைந்தபாடில்லை.