உனக்கு 16 ! எனக்கு 38 ! இளம் சிறுவன் வாழ்வை சீரழித்த நடுத்தர வயது பெண்! அதிர்ச்சி சம்பவம்!

மும்பையில் 16 வயது சிறுவனுக்கு ஆசைகள் காட்டி அழைத்து சென்று அவனுடன் உல்லாசமாக இருந்த 4 குழந்தைகளுக்கு தாய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.


மும்பை நேரு நகரை சேர்ந்த 16 வயது சிறுவன் வீட்டில் இருந்து வெளியில் சென்ற நிலையில் மாயமான நிலையில் அவரது பெற்றோர் அவனை பல இடங்களிலும் தேடியும் கிடைக்காமல் போனதால் போலீசில் புகார் கொடுத்தனர்.

அதே சமயம் 4 குழந்தைகளுக்கு தாயான 38 வயது பெண்மணி ஒருவர் மாயமான நிலையில் அவரை பல இடங்களில் தேடி வெறுத்துப் போன கணவர் போலீசில் புகார் அளித்திருந்தார்.

ஒரே சமயத்தில் இருவரும் காணாமல் போனது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இது தொடர்பாக போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் அந்தப் பெண்மணி அந்த சிறுவனிடம் அத்து மீறி பழகி வந்ததாக கூறப்படுகிறது.

16 வயது சிறுவனை அழைத்து சென்ற பெண்மணி முன்னெச்சரிக்கையாக இரண்டு பேரின் செல்போன் சிம்கார்டுகளை உடைத்து போட்டுவிட்டு டெல்லி, குஜராத், நவ்சாரி உள்ளிட்ட பகுதிகளுக்கு அழைத்து சென்று வீடு வாடகைக்கு எடுத்து அந்த சிறுவனிடம் முறையற்ற வாழ்வு வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்ன மகாராஷ்டிரா மாநிலம் மும்பை எல்லைக்குட்பட்ட குர்லா பகுதியில் சிறுவனை அழைத்துக்கொண்டு தப்பிய பெண் இருப்பதை போலீசார் கண்டுபிடித்து அவரை கைது செய்தனர். பின்னர் அந்த பெண்ணால் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுவனை மீட்டு வந்தனர் போலீசார். 

இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுவன் கூறியபோது தன்னை மிரட்டி பலமுறை பலவந்தப்படுத்தி உடலுறவு வைத்துக்கொண்டதாக தெரிவித்ததை அடுத்து அந்த பெண்ணை ஆட் கடத்தல் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.