37 வயதாகியும் திருமணம் ஆகவில்லை..! ஏக்கத்தில் 17 வயது பெண்ணுடன்...! அதிர வைத்த சம்பவம்!

17 வயது சிறுமியை திருமணம் செய்து குடும்பம் நடத்தி வந்த 37 வயது நபர் உள்பட 4 பேர் கரூர் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


கரூர் மாவட்டத்தை சேர்ந்த ஜெயலட்சுமணன் என்பவர் இளைஞனாக இருந்தபோதே திருமணம் செய்யாமல் காலம் கடந்த வயதில் அவருக்கு திருமண ஆசை வந்துள்ளது. இதையடுத்து பெண் தேடும் படலத்தை தொடர வயது அதிகம் எனக் கூறி அனைவரும் பெண் கொடுக்க மறுத்துவிட்டனர்.

இந்நிலையில் வறுமையில் வாடும் 17 வயது சிறுமி ஒருவரை பார்த்த ஜெயலட்சுமணனின் தாய் நல்லம்மாள் சிறுமியின் பெற்றோரிடம் ஆசை வார்த்தை கூறி அவர்களை திருமணத்திற்கு சம்மதிக்க வைத்துள்ளார். ஆனால் இந்த திருமணத்தில் சிறுமிக்கு விருப்பம் இல்லை என கூறப்படுகிறது. திருமணம் ஆகி 6 மாதம் ஆன நிலையில் கிராம மக்கள் சிலர் சிறுமியின் குழந்தைத்தனமான நடவடிக்கைகளை பார்த்து சந்தேகம் அடைந்து குழந்தைகள் நல அமைப்பிடம் புகார் அளித்துள்ளனர்.

பின்னர் குழந்தைகள் நல அமைப்பினர் வந்து விசாரிக்க இது குழந்தை திருமணம் என்பது உறுதி செய்யப்பட்டது. பின்னர் சிறுமியுடம் தனக்கு விருப்பம் இல்லாமல் திருமணம் செய்து வைத்து விட்டதாக போலீசில் புகார் அளித்தார். சிறுமியின் புகாரை ஏற்றுக்கொண்ட போலீஸ் ஜெயலட்சுமனன் மற்றும் திருமணத்திற்கு உடந்தையாக இருந்த 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். போலீஸ் தேடுவதை தெரிந்து தலைமறைவான ஜெயலட்சுமணனின் தாய் நல்லம்மாளை தீவிரவாக தேடிவருகின்றனர். 

37 வருடங்கள் திருமணம் செய்யாமல் காத்திருந்தவர் இன்னும் 6 மாதம் காத்திருந்தால் அந்த சிறுமிக்கு 18 வயது நிரம்பியிருக்கும். திருமண வாழ்க்கைக் தடை இருந்திருக்காது. தற்போது தேவையின்றி சிக்கலில் சிக்கி சிறையிலுள்ளார் முத்தன கத்திரிக்கா.