55 மாடி கட்டிடத்தின் உச்சியில் 360 டிகிரி நீச்சல் குளம்! உள்ளே செல்வது எப்படி தெரியுமா?

இங்கிலாந்து நாட்டில் அமைய உள்ள 360 டிகிரி நீச்சல் குளம் பற்றிய புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.


இங்கிலாந்து தலைநகர் லண்டனில் இன்ஃபினிட்டி கட்டிடம் உள்ளது. இது உலக புகழ்பெற்ற கட்டிடங்களில் ஒன்றாகும். மொத்தம் 55 மாடிகளைக் கொண்ட அந்த கட்டிடத்தின் மொட்டைமாடியில் 360 டிகிரி கோணத்தில் உள்ள உலகின் முதல் நீச்சல் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இதுபற்றிய மாதிரி புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.

அதென்ன 360 டிகிரி நீச்சல் குளம் என கேட்கறீர்களா, இதோ மேலும் படியுங்கள். மொட்டை மாடியில் சுமார் 200 மீட்டர் உயரத்திற்கு வெறும் கண்ணாடிகளை வேலி போல அமைத்து, அதில் நீச்சல் குளம் நடுவே அமைக்கப்படும். இந்த குளத்தில் 6,00,000 லிட்டர் அளவுக்கு அக்ரலிக் ரக தண்ணீர் நிரப்பப்பட உள்ளது.

இதன்மூலமாக, தண்ணீருக்கு உள்ளே வெளியே தெளிவாக பார்க்க முடியும். இதுதவிர, காலை நேரத்தில் சூரிய ஒளியில் மிக தெளிவாகவும், மாலை நேரத்திலும்    விளக்கு வெளிச்சத்தில் தகதகவென ஜொலிக்கும் வகையில் நீச்சல் குளம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதை விட ஆச்சரியமான விசயம், இந்த நீச்சல் குளத்தின் அடிப்பகுதியும் கண்ணாடியில்தான் அமைய உள்ளது. இதனால், கட்டிடத்தின்  கீழே இருந்தால் கூட மொட்டை மாடியில் நீந்துபவர்களை நிமிர்ந்து பார்க்க முடியும். 2020ம் ஆண்டிற்குள் இந்த நீச்சல் குளம் கட்டி முடிக்கப்பட உள்ளது.

இதற்கான மாதிரி புகைப்படங்களில் இன்னொரு விசயம், நீச்சல் குளத்திற்குச் செல்லும் படிக்கட்டு எங்கே இருக்கும் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை. இதை விமர்சித்தே இந்த புகைப்படங்களை பலரும் வைரலாக பகிர்ந்து வருகிறார்கள்.