பறக்கும் விமானத்தில் மைனர் பெண்ணை அந்த இடத்தில் தொட்ட தொழில் அதிபர்! பிறகு நேர்ந்த தரமான சம்பவம்!

பறக்கும் விமானத்தில் மைனர் பெண்ணிடம் அத்து மீறிய நபர் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.


கடந்த சில நாட்களுக்கு முன் மும்பையில் இருந்து துபாய் சென்ற விமானத்தில் உறவினர் ஒருவருடன் அந்தச் சிறுமி பயணம் செய்தார். அப்போது சிறுமியின் இருக்கைக்கு பின் இருக்கையில் அந்த நபர் அமர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் விமானத்தில் உறங்கிய சிறுமி, விபரீதமான தொடுதல்களால் அதிர்ச்சியடைந்து விழித்த்தார். அப்போது அந்த நபர் தொடக் கூடாத இடங்களில் தொட்டுக் கொண்டிருந்தது தெரிய வந்தது. இந்த விவகாரத்தை அச்சம் காரணமாக யாரிடமும் சொல்லாத அந்த சிறுமி துபாய் சென்று சேர்ந்த பின் தனது உறவினரிடம் மட்டும் தெரிவித்துள்ளார். 

இதையடுத்து மும்பை திரும்பிய பின் அந்தச் சிறுமியும், உறவினரும் மும்பை சாகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார், பயணப் பதிவுகளின் அடிப்படையில் அந்த நபரின் பெயர் சுமன் பால் என்றும் அவனது வீட்டு முகவரியையும் தெரிந்துகொண்டனர். அந்த நபர் மீது போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்துள்ளனர்.