கார், வேனில் பணத்தை கொண்டுபோனால் பிடிக்கிறார்கள் என்று புதிய பாணியில் பஸ்ஸில் பணம் கொண்டுபோகும் புதிய டெக்னிக்கை கையாண்டார்கள். பறக்கும் படையை உஷாராக இருந்தவர்கள், கூடவே இருந்து குழி பறிக்கும் நபரை கண்டுகொள்ளாததால், அந்தப் பணம் லபக் ஆனது.
பஸ்ஸில் பிடிபட்ட 3.5 கோடி பணம் டி.டி.வி.தினகரனுக்கு சொந்தமாம்! மாட்டிவிட்ட வேட்பாளர் யாருன்னு தெரியுமா?
ஆம், திருவண்ணாமலையில் இருந்து சேலத்துக்குப் போகும் அரசு பஸ்ஸில் பணம் கொண்டுசெல்லப்படுகிறது என்று தேர்தல் பறக்கும் படைக்கு தகவல் சொல்லப்பட்டது. அதன்படி, திருவண்ணாமலையில் இருந்து நரிப்பள்ளி, தானிப்பாடி வழியாக பையர் நாயக்கன்பட்டி அருகே பஸ் வந்தபோது, தேர்தல் பறக்கும்படையினர் அந்த பஸ்சை நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது 7 பைகளில் கட்டுக் கட்டாக பணம் பேப்பர்களில் சுற்றிவைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பணம் யாருடையது என்று கேட்டபோது, பஸ்சில் இருந்தயாரும் உரிமை கோரவில்லை. இதனையடுத்து பைகளில் இருந்த 3 கோடியே 47 லட்சத்து 51 ஆயிரத்து 110ரூபாயை பறிமுதல் செய்து, அரசு கருவூலத்திற்கு அனுப்பப்பட்டது. அந்தப் பையில் கிடைத்த வங்கி சலான் மூலம் குறிப்பிட்ட வங்கியில் விசாரிக்கப்பட்டு, ஒருவழியாக அது யாருடைய பணம் என்று கண்டறியப்பட்டுவிட்டது.ஆம், அந்தப் பணத்துக்கு சொந்தக்காரர் ஓய்வுபெற்ற தாசில்தாரான பொல்லியப்பன் ஆவார். தர்மபுரியை அடுத்த பாலகோடுவில் இருக்கும் பொல்லியப்பன், தினகரனின் அம்மா மக்கள் முன்னேறக் கழகத்தின் பொறுப்பாளராக இருக்கிறார்.
இதையடுத்து அவரது வீட்டில் இன்று நடைபெற்ற ரெய்டில் 25 லட்சம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும் இதற்கு முன்பு பணம் ஏதும் அனுப்பப்பட்டுள்ளதா அல்லது வேறு எங்கும் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்று தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.இதுவரை தி.மு.க.வை மட்டுமே குறிவைத்து நடந்துவந்த ரெய்டு இப்போது அ.ம.மு.க. பக்கம் பாய்ந்துள்ளது.
எப்படி இந்தத் தகவல் கிடைத்தது என்று ரெய்டுக்குப் போன பறக்கும் படையினரிடம் பேசினோம். ‘’அட, இது எங்களுக்கு வந்த போன் இல்லைங்க... சென்னையில் இருந்து எங்களுக்குத் தகவல் வந்திச்சு. நாங்க போய் பிடிச்சோம். சென்னைக்குத் தகவல் சொன்னது, இப்போ தினகரன் கட்சியில எம்.பி. வேட்பாளராக நிற்கும் ஒருத்தர்தான். அவர் தொகுதிக்குப் பணம் தராம இழுத்தடிச்ச கோபத்துல அடுத்த தொகுதிக்குப் போன பணத்தை மாட்டி விட்டுட்டார் என்று சொன்னார்கள்.
அடப்பாவமே, தினகரனுக்கு இப்படி ஒரு வேட்பாளரா?