வயது வெறும் 34 தான்..! ஒரு நாட்டுக்கே பிரதமர் ஆன இளம் பெண்! யார், எப்படி தெரியுமா?

பின்லாந்து நாட்டை சார்ந்த சன்னா மரின் (வயது 34) அந்நாட்டினுடைய பிரதம மந்திரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.


கடந்த சில நாட்களுக்கு முன்பாக பின்லாந்து நாட்டு முன்னாள் பிரதம மந்திரியான ஆண்டி ரின்னி என்பவர் தபால் துறையில் தான் செய்ய வேண்டிய கடமைகளை சரியாக செய்யாததால் தானே தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார்.

இதனையடுத்து பிரதம மந்திரி பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. ஏற்கனவே போக்குவரத்து துறை அமைச்சராக பணியாற்றி வந்த சன்னா மரின் பிரதம மந்திரி பதவிக்கு போட்டியிட்டார்.

அதுமட்டுமில்லாமல் இந்த பிரதம மந்திரி பதவிக்கு போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களுமே 35 வயதுக்கு உட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எந்தவிதமான பணியையும் எல்லாத்துறைகளிலும் பெண்களால் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார் பின்லாந்து நாட்டு பிரதம மந்திரி சன்னா மரின்.

இளம் வயதிலேயே ஒரு நாட்டின் பிரதம மந்திரியாக ஒரு பெண் பதவி ஏற்றிருப்பது மிகவும் பெருமைக்குரிய ஒன்றாகும்.

இதேபோல் நியூசிலாந்து நாட்டின் ஜசிந்தா ஆர்டனே மிக சிறிய வயதில் அந்நாட்டின் பிரதம மந்திரியாக பதவி ஏற்று கொண்டது குறிப்பிடத்தக்கது.