தேர்தல் பணிகள் தமிழகத்தில் மும்முரமாக நடந்து கொண்டுள்ள நிலையில் தேர்தல் பணிகளில் பணியாற்றுவதற்காக அரசு அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இருட்டு அறையில் மயங்கி சரிந்த ஆசிரியை! மருத்துவமனையில் காத்திருந்த அதிர்ச்சி தகவல்!
சேலம் மையத்தில் பயிற்சிக்கு வந்த நிர்மலா என்னும் ஆசிரியை மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வரும் 18ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் வாக்குச்சாவடி மையங்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை மையங்களில் பணியாற்றும் அரசு ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. பெரும்பாலும் வாக்குச் சாவடிகளில் ஆசிரியர்களே நியமிக்கப்படுவார்கள். இதனடிப்படையில் சேலத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது.
சேலத்தில் மின்னாம்பாளையம் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் கட்டம் பயிற்சி நடைபெற்றது. பயிற்சியில் பங்கேற்ற நித்யா 34 ,இவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே அதிர்ச்சி அடைந்த உடனிருந்த அலுவலர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது நித்யாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கொண்டு வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த அரசு முதன்மை கல்வி நிர்வாகி கணேசமூர்த்தி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.