குழந்தையுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன்..! திடீரென தொடையில் அடித்தான்..! கதறிய இளம் தாய்! நடு ரோட்டில் பதற வைக்கும் சம்பவம்!

பெங்களூரு: செக்ஸ் தொழிலில் ஈடுபடவில்லை என்றால் உனது குழந்தையை கடத்துவோம், என்று இளம் தாய்க்கு தொல்லை கொடுத்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.


பெங்களூருவைச் சேர்ந்த 33 வயதாகும் இளம்பெண் ஒருவர், பானஸ்வாடி போலீஸ் நிலையத்தில் சமீபத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில், தனது வீட்டின் அருகாமையில் வசிக்கும் சிலர் ஒன்று சேர்ந்துகொண்டு, அடிக்கடி தன்னை மிரட்டுவதாகக் கூறியுள்ளார். அத்துடன், ''நான் அழகாக, சிவப்பாக இருப்பதால், என்னை பாலியல் தொழிலில் ஈடுபடும்படி அவர்கள் மிரட்டுகிறார்கள்.

இப்படி செய்யவில்லை எனில், எனது குழந்தையை கடத்துவோம் என்றும் மிரட்டுகிறார்கள். இதுதவிர அடிக்கடி என்னை வீடு புகுந்து அடித்து, உதைத்து சித்ரவதை செய்கிறார்கள்,'' என, அந்த பெண் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.  

இதன்பேரில், வழக்குப் பதிந்து போலீசார் விசாரிக்கின்றனர். முதல்கட்டமாக, குற்றம்சாட்டப்பட்ட நபர்களை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று போலீசார் விசாரித்துள்ளனர். மேலும், சம்பந்தப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் மற்றும் அவர் வசிக்கும் வீட்டின் உரிமையாளர் உள்ளிட்டோரை உரிய பாதுகாப்பு வழங்கும்படி போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

குடும்பத்தை பிரிந்து, மகனுடன் தனியாக வசித்து வரும் இளம்பெண் என்பதால், அவருக்கு இத்தகைய மிரட்டலை அந்த கும்பல் விடுத்திருக்கலாம் என்று, போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.