கடலூர் மாவட்டம் நெய்வேலியில் கணவனை இழந்த பெண்ணை 5 கொடூரர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்த பிரச்சனையில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட நபர் ஒருவரும் கொல்லப்பட்டார்.
31 வயது விதவைப் பெண்! 4 ஆண்கள்..! 2 முறை..! மாறி மாறி அரங்கேற்றிய பலாத்காரம்! நெய்வேலி பரபரப்பு!
கடலூர் மாவட்டம் நெய்வேலி அருகே கணவனை இழந்த பெண் ஒருவர் தனது நண்பர் சுரேந்தர் என்பவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அவர்கள் நெய்வேலி அனல் மின் நிலையம் அருகே சென்றபோது 5 பேர் கொண்ட கும்பல் வழிமறித்தது. பின்னர் கத்தியை காட்டி அந்த பெண்ணுடன் வந்த நபரை விரட்டிவிட்டனர்.
பின்னர் பெண்ணை ஆள் இல்லாத தோப்புக்குள் தூக்கிச் சென்று 5 பேரும் ஆசை தீர பாலியல் பலாத்காரம் செய்தனர். இதில் அந்த பெண் மயக்கம் அடைந்தார். பின்னர் சிறிது நேரம் கழித்து அந்த பெண்ணை சாம்பல் ஏரி பகுதிக்கு தூக்கி சென்றனர். பின்னர் மயக்கம் தெளிந்தவுடன் அங்கேயும் மீண்டும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
பின்னர் அந்த பெண்ணை யார் ஊருக்குள் அழைத்து செல்வது என்று பிரச்சனை ஏற்பட்டது. பிரச்சனை கைகலப்பாக மாற கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த 5 பேரில் பிரகாஷ் என்பவர் கொல்லப்பட்டார். பின்னர் காவல்துறையிடம் தஞ்சம் அடைந்த 4 பேரும் குடிபோதையில் பிரகாஷை கொன்றுவிட்டதாக தெரிவித்தனர். ஆனால் பெண்ணை பலாத்காரம் செய்த விஷயத்தை மறைத்து விட்டனர்.
இதற்கிடையே தான் 5 பேர் கொண்ட கும்பலால் சீரழிக்கப்பட்டதாக அந்த பெண் நெய்வேலி தெர்மல் போலீசில் புகார் அளிக்க கொள்ளிருப்பு காலனியை சேர்ந்த கார்த்திக், சதீஷ்குமார், ராஜதுரை, சிவபாலன் ஆகியோரை போலிசார் கைது செய்தனர். இவர்கள் மீது கற்பழிப்பு, கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.