ஐசியுவில் அனுமதிக்கப்பட்ட பெண் நோயாளி! மயக்க மருந்து கொடுத்து கற்பழித்த டாக்டர்கள்!

ஐசியூவில் அனுமதிக்கப்பட்ட பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.


இந்தியாவில் நாளுக்கு நாள் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதன்படி, உத்தரப்பிரதேச மாநிலத்தில், தனியார் மருத்துவமனை ஒன்றில், அவசர சிகிச்சைப் பிரிவின்கீழ், ஐசியூ வார்டில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சேர்க்கப்பட்டார். அவர், கல்லீரல் கோளாறு மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக பாதிக்கப்பட்டிருந்தார். 

இந்நிலையில், இந்த பெண்ணை மருத்துவர்கள் முழு ஓய்வு எடுக்கும்படி வலியுறுத்தினர். இதன்பேரில், அவர் குறிப்பிட்ட மருத்துவமனையிலேயே படுக்கை வசதியுடன் கூடிய அறைக்கு மாற்றப்பட்டார். அங்கு, சிகிச்சை பெற்று வந்த அப்பெண்ணை, மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் ஒன்று சேர்ந்து மயக்க ஊசி போட்டு, பலாத்காரம் செய்துள்ளனர். இதற்கு, அங்கு பணிபுரியும் பெண் ஒருவரும் உடந்தையாக இருந்துள்ளார்.

குறிப்பாக, பலாத்காரம் செய்வதற்கு முன்பாக, சிசிடிவி கேமிராவை அணைத்துவிட்டு, இத்தகைய கொடுஞ்செயலை அவர்கள் செய்துவந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினர் அளித்த புகாரின்பேரில், சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிந்த போலீசார், உடனடியாக, கைது செய்தும் உள்ளனர்.