பெங்களூருவில் காஸ்ட்லி பைக்கில் நடுரோட்டில் அசுர வேகத்தில் சென்று ஸ்டாண்ட் மற்றும் பீலிங் செய்த 3 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
காஸ்ட்லி பைக்கில் நடுரோட்டில் ஸ்டன்ட்..! அசுரே வேகத்தில் வீலிங்..! 3 இளைஞர்கள் பரலோகம் போன சம்பவம்! எப்படி தெரியுமா?

விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களில் மூன்று இளைஞர்கள் அதிகாலை பெல்லாரி சாலையில் உள்ள யெலஹங்காவிலிருந்து ஹெப்பலை நோக்கி சென்று கொண்டு இருந்துள்ளனர். பின்னர் இந்த மூன்று இளைஞர்களும் ஜகூர் விமான நிலையம் அருகே சென்று கொண்டிருந்த பொழுது பீலிங் மற்றும் ஸ்டன்ட் ஆகியவற்றை மேற்கொண்டுள்ளனர். இவர்கள் மூவருமே தங்களுடைய காஸ்ட்லியான வண்டியில் ஸ்டண்ட் செய்துகொண்டிருந்த பொழுது மூவரில் ஒரு இளைஞரின் இரு சக்கர வாகனம் அவரது கட்டுப்பாட்டை இழந்து மற்ற இருவரது இருசக்கர வாகனங்களின் மீது மோதியுள்ளது. அதிவேகமாக அந்த இரு சக்கர வாகனம் மோதியதில் மூவரும் பலத்த காயங்களோடு பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இறந்த அந்த இளைஞர்கள் கோவிந்த்பூரில் வசிக்கும் முகமது ஆதி அயன் (16), நாகவராவில் வசிக்கும் மஜ் அஹ்மத் கான் (17), எச்.பி.ஆர் தளவமைப்பில் வசிக்கும் சயீத் ரியாஸ் (22) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் இருந்தாலும் மூன்று பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பொலிஸின் கூற்றுப்படி, ஞாயிற்றுக்கிழமை காலை 6:30 மணியளவில், மூவரும் தங்களது காஸ்ட்லியான பைக்கில் வீலி போன்ற ஸ்டண்ட் காட்சிகளை நிகழ்த்தியுள்ளனர். அவர்களில் ஒருவர் தனது இரு சக்கர வாகனத்தின் மீது கட்டுப்பாட்டை இழந்தபோது, மற்றவர்களின் இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில் ஏற்பட்ட விபத்தில் மூவரும் பரிதாபமாக உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து போலீசார் தங்களுடைய விசாரணையையும் தீவிரப்படுத்தியுள்ளனர்.