3 வயது குழந்தைக்கு ஓட்டுரிமை..! வாக்காளர் அடையாள அட்டை..! அதிர வைத்த அதிகாரிகள்..! பரபர காரணம்!

தெலுங்கானா மாநிலத்தில் வழங்கப்பட்ட வாக்காளர் அட்டையில் தாய்க்கு பதிலாக அவரது 3 வயது குழந்தையின் புகைப்படம் இடம்பெற்றுள்ள அதிர்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது.


கோடிக்கணக்கான வாக்காளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும்போது சில குளறுபடிகள் ஏற்படுவது இயற்கை. அதுவும் தேர்தல் நெருங்கும் நேரத்தில் அழுத்தம் கொடுத்து வேகமாக தயாரிக்கப்படும் அடையாள அட்டைகளால் பல குளறுபடிகள் நடக்கும். புகைப்படம் மாறி இருக்கும். ஆண் வாக்காளர் அட்டையில் பெண் முகம் இருக்கும், வயது, பெயர், தாய் பெயர் என குளறுபடிகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகும். சிலர் 25 வயதானவருக்கு 75 வயது கூட போட்டிருப்பார்கள். ஆனால் இது எல்லாமே 18 வயது கடந்தவர்களின் அடையாள அட்டைகளில் மட்டுமே இருக்கும்.

இதெல்லாம் ஒரு படி மேலே போய் தெலங்கானா மாநிலத்தில் மாதிரி வாக்காளர் பட்டியலில் எல்கேஜி படிக்கும் 3 வயது சிறுமிக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை தயாரித்து கொடுத்துள்ளனர். தெலங்கானாவில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி மாநில தேர்தல் அதிகாரிகள் மாதிரி வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.

ஒரு அடையாள அட்டையில் கரீம்நகரை சேர்ந்த ரமேஷ் என்பவரின் மனைவி படத்திற்கு பதிலாக அவரது 3 வயது மகளின் பெயர், புகைப்படம் இருந்துள்ளது. அது ரமேஷின் மனைவி நந்திதா என்பவருக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டை. அந்த அட்டையில் பெயர் நந்திதா வயது 35 எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ரமேஷ், தேர்தல் அதிகாரியிடம் இதுகுறித்து முறையிட்டுள்ளார்.

புகைப்படம் தவறு என்றாலும் 3 வயது புகைப்படம் எப்படி தேர்தல் ஆணையத்தின் கைகளுக்கு சென்றது என தெரியவில்லை. இந்த அடையாள அட்டையை தயாரித்த கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர், அதை ப்ரூப் ரீட் செய்தவர் என ஒருவரின் கண்களுக்கு கூட அது குழந்தையின் புகைப்படம் என தெரியவில்லையா என பலர் கேலி செய்துள்ளனர்.