பள்ளியில் சிறுமிக்கு பாலியல் பயங்கரம்! 2 பெண் ஆயாக்கள் கொடூரம்!

பள்ளிக்கு சென்ற சிறுமியை பாலியல் சித்ரவதை செய்த இரண்டு ஆயாக்களை போலீசார் தேடி வருகின்றனர்.


ஐதராபாத்தில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் தம்பதி, தங்களது மூன்றரை வயது பெண் குழந்தையை மாதாபூரில் உள்ள ப்ரீ ஸ்கூலில் சேர்த்துள்ளனர். கடந்த வாரம் பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய சிறுமி, கடும் வலியால் துடித்துள்ளாள். 

இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் சிறுமியை மருத்துவமனை அழைத்து சென்றனர். பரிசோதனை செய்த மருத்துவர்கள் சிறுமி கொடூரமாக பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டதாக கூறியுள்ளனர். 

இது குறித்து விசாரித்த போது சிறுமி பள்ளியில் வேலை பார்க்கும் இரண்டு பெண் உதவியாளர்களை கை காட்டியுள்ளார். அந்த சிறுமியிடம் மிருகத்தனத்துடன்  அந்த இரண்டு ஆயாக்களும் நடந்து கொண்டது தெரியவந்தது. 

தாயின் புகாரின் பேரில் வழக்கு பதிந்துள்ள போலீசார், தலைமறைவாக உள்ள இரு பெண்களை தேடி வருகின்றனர். அவர்களை பிடித்து கடும் தண்டனை வழங்க வேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.