கேரளாவில் குழந்தையின் தலைக்குள் பானை மாட்டிக்கொண்ட சம்பவம் அப்பகுதியில் மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், பெற்றோர் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்கள்.
ஈயப் பானைக்குள் சிக்கிய சிறுவன் தலை! பதறித் துடித்த பெற்றொர்! அதிர்ச்சி காரணம்!

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள பிரவம் என்ற ஊரை சேர்ந்தவர்கள் ஆபிரஹாம்-ஜிஜி தம்பதியற்கு பியான் என்ற 3 வயதில் அழகிய மகன் ஒருவன் இருகிறான்.
பியான் வீட்டுக்கு வெளியே விளையாடிக்கொண்டு இருந்துள்ளான். அப்போது வீட்டு வாசலில் இருந்த ஈயப்பானை ஒன்றை எடுத்து விளையாடியபோது எதிர்பாராதவிதமாக பியான் தலைக்குள் மாட்டியுள்ளது. சிறிது நேரம் கழித்து பியான் கதறி அழுதுள்ளது.
அழுகை சத்தம் கேட்ட பியானின் தாய் ஜிஜி ஓடிவந்துள்ளார். அப்போது மகனின் தலைக்குள் பானை சிக்கியிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அவரது தாய், பியானின் தலைக்குள் மாட்டியுள்ள பானையை எடுக்க முயற்சித்துள்ளார்.
என்ன முயன்றாலும், ஜிஜியால் எடுக்க முடியவில்லை. இதனை அடுத்து அக்கம்பக்கத்தினரும் முயன்று பார்த்துள்ளனர். யாராலும் எடுக்க முடியாததால் குழந்தையின் பெற்றோர் அதிர்ச்சியில் உரைந்தனர். மேலும், குழந்தை தொடர்ந்து அழுதுகொண்டே இருந்துள்ளது இதனை கண்ட பெற்றோர் மிகவும் சோகத்தில் ஆழ்ந்தனர்.
பின்னர், வேறுவழியின்றி ஜோஜின் என்பவர் குழந்தையை அப்பகுதியில் உள்ள தீயணைப்புத்துறை அலுவலகத்துக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு தீயணைப்பு வீரர்கள் கத்தரியால் பானையை வெட்டி எடுத்து குழந்தையை மீட்டுள்ளனர்.
பானை எடுத்த பின்னர் குழந்தையின் முகத்தை கண்டு மிகவும் ஆனந்தம் அடைந்தார்கள் அவனது பெற்றோர்கள். மேலும், இந்த சம்பம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.