அம்மா வயிறு வலிக்குது..! கதறித் துடித்த 3 வயது மகள்..! ஹாஸ்பிடல் ஸ்கேன் ரிப்போர்ட்டை பார்த்து அதிர்ந்த டாக்டர்கள்!

வயிற்று வலியால் துடித்த 3 வயது சிறுமியின் வயிற்றில் தங்க தோடு இருப்பதை கண்ட மருத்துவர்கள் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர்.


துபாய் நாட்டை சேர்ந்த 3 வயது சிறுமியொருவர் தன்னுடைய வீட்டில் வாயில் தங்க மோதிரத்தை வைத்து விளையாடி வந்துள்ளார். இதை அந்த குழந்தையின் தாயாரும் கண்டுள்ளார். அடுத்த சில மணி நேரத்தில் அந்த குழந்தை வலியால் துடித்த அழுது கொண்டே இருந்தது. சில நிமிடங்களிலேயே குழந்தைக்கு மூச்சு விடும் சிரமமும் ஏற்பட்டது. பயந்து போன குழந்தையின் தாயார் உடனடியாக குழந்தையை "ஷக் கலிப்பா மெடிக்கல் சென்டர்" என்ற மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அப்போது அந்த குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் ஸ்கேன் எடுத்து பார்க்க அறிவுறுத்தினர். ஸ்கேன் செய்து பார்த்த மருத்துவர்கள் பேரதிர்ச்சி அடைந்தனர். அந்த குழந்தையின் வயிற்றில் தங்க மோதிரம் கிடந்ததை கண்டு மருத்துவர்கள் வியந்தனர். 

அவருக்கு சிகிச்சை பார்த்த மருத்துவரான டேவிட் ரூட் கூறுகையில், "குழந்தை தங்க மோதிரத்தை விழுங்கிவிட்டதாக பெற்றோர் அழைத்து வந்தனர். குழந்தையை பரிசோதித்த போது வயிற்று தங்க மோதிரம் இருந்ததை கண்டறிந்தோம். உடனடியாக அறுவை சிகிச்சையின் மூலம் தங்க மோதிரத்தை வெளியே எடுத்தோம்"  என்று கூறினார்.

இதுபோன்ற சம்பவங்கள் கடந்த 3 ஆண்டுகளில் 256 குழந்தைகளிடம் காணப்பட்டதாகவும் அந்த மருத்துவ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இந்த சம்பவமானது மருத்துவமனையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.