பிரதீப்! தக்ஷனா! நிரஞ்சனா! தமிழ் புலிக்குட்டிகளுக்கு வடமொழியில் பெயர்! எடப்பாடி பழனிசாமி செயலால் சர்ச்சை!

சென்னையை அடுத்த, வண்டலூர், அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில், 3 சிங்கக்குட்டிகளுக்கும் 4 புலிக்குட்டிகளுக்கும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பெயர் சூட்டினார்கள்.


"சிவா" என்ற ஆண் சிங்கத்திற்கும் "நீலா" என்ற பெண் சிங்கத்திற்கும் கடந்த ஜனவரி மாதம் பிறந்த ஆண் சிங்கக்குட்டிக்கு பிரதீப் என்றும், 2 பெண் சிங்கக் குட்டிகளுக்கு "தக்ஷனா", "நிரஞ்சனா"  என்றும் முதலமைச்சர்  பெயர் சூட்டினார்.

அதேபோல் "விஜய்" என்ற ஆண் புலிக்கும் "உத்ரா" என்ற பெண் புலிக்கும் 2018 ஆகஸ்ட் மாதம் பிறந்த ஆண் புலிக்குட்டிக்கு மித்ரன் என பெயர் சூட்டப்பட்டது.

"நகுலா" என்ற ஆண் புலிக்கும் "நர்மதா" என்ற பெண் புலிக்கும் கடந்த ஜனவரி மாதம் பிறந்த பெண் குட்டிகளுக்கு  வெண்மதி மற்றும் யுகா என்றும் ஆண் குட்டிகளுக்கு "மித்ரன்", "ரித்விக்"  என்றும் பெயர் சூட்டினார்.

மேலும் பீஹார் மற்றும் தெலுங்கானா மாநிலங்களிலிருந்து ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் காண்டாமிருகங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.

அதேபோன்று, பாட்னா, சஞ்சய்காந்தி உயிரியல் பூங்காவிலிருந்து ஒரு பெண் காண்டாமிருகம் கொண்டு வரப்படவுள்ளது. அதற்காக வளமைப்படுத்தப்பட்ட காண்டாமிருக இருப்பிடத்தையும் முதல்வர் திறந்து வைத்தார்