3 ஆண்களுடன் ஒரு பெண்..! படுவேக பைக் ரைடு! எதிரே வந்த வேன்! நொடியில் நேர்ந்த கோரம்! 3 பேர் ஸ்பாட் அவுட்!

சென்னை ஈசிஆர் ரோட்டில் ஒரே பைக்கில் சென்ற ஒரு பெண் உட்பட 3 பேர் எதிரே வந்த வேன் மீது மோதி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தனர்.


சோழிங்கநல்லூர் அருகே உள்ள பெரும்பாக்கம் பகுதியில் 19 வயதான டில்லி மற்றும் 15 வயதான மோகனா ஆகியோர் வசித்து வருகின்றனர். நேற்று இரவு இந்த இரண்டு பேரும் மேலும் இரண்டு இளைஞர்களுடன் ஒரே பைக்கில் ஈசிஆர் ரோட்டில் உள்ள தேவநேரி பகுதியில் சென்றுள்ளனர். 

அங்கு அருகே உள்ள பெட்ரோல் பங்கில் கேனில் பெட்ரோலை வாங்கி கொண்டு நான்கு பேரும் பைக்கில் ரோடை கிராஸ் வைத்துள்ளனர். அப்போது மாமல்லபுரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த வேன் ஒன்று பைக்கின் மீது வேகமாக மோதியது. இதனால் பைக்கில் பயணம் செய்த 4 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதனால் சம்பவ இடத்திலேயே டில்லி, மோகனா உட்பட மற்றொரு இளைஞரும் சேர்ந்து மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

இவர்களுடன் பைக்கில் பயணம் செய்த மற்றுமொரு இளைஞர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் போலீசாரால் அனுமதிக்கப்பட்டுள்ளார். பின்னர் போலீசார் உயிரிழந்த பெண் உட்பட 3 பேர் சடலங்களை கைப்பற்றினர். உயிரிழந்த இளைஞர் மற்றும் உயிருக்கு போராடி வரும் இளைஞர் யார் என்ற விவரம் இதுவரை தெரியவில்லை. மேலும் விபத்துக்கு காரணமான வேன் டிரைவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.