சுடுகாட்டில் இருந்து வேட்டியை போற்றிக் கொண்டு வீடு திரும்பிய சிறுமி! அவர் கூறிய அதிர்ச்சி தகவல்!

12 வயது சிறுமி என்றும் பாராமல் மது போதையில் 3 பேர் அவரை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ள சம்பவமானது வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வேலூர் மாவட்டத்தில் மேட்டுப்பாளையம் எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு 12 வயது சிறுமி ஒருவர் வசித்து வந்தார். இவருடைய வீட்டில் கழிவறை வசதி இல்லை. சில நாட்களுக்கு முன்னர் மாலை நேரத்தில் இயற்கை உபாதையை கழிப்பதற்காக இவர் பாலாற்று கரையோரத்திற்க்கு சென்றார்.

அப்போது அங்கு குடிபோதையில் 3 பேர் சுற்றித்திரிந்து கொண்டிருந்துள்ளனர். அவர்கள் சீட்டாடி கொண்டிருந்ததை பார்த்த சிறுமி அங்கிருந்து வேறு பக்கமாக செல்ல முயன்றுள்ளார். ஆனால் சிறுமியை 3 பேரும் துரத்தி சென்று மடக்கி பிடித்தனர். சிறுமியை கத்தாமல் பார்த்து கொள்வதற்காக மதுபாட்டில்களை வைத்து அவரை மிரட்டியுள்ளனர். அதன் பின்னர் 3 பேரும் சேர்ந்து சிறுமியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். 

சிறுமி தப்பி சென்று பொதுமக்களிடையே புகார் அளித்து விடுவார் என்ற அச்சத்தில் அவருடைய ஆடைகளை 3 பெரும் கிழித்தெறிந்துள்ளனர். அங்கிருந்து தப்பிப்பதற்கு ஆடையின்றி தவித்த அந்த இளம்பெண், சுடுகாட்டில் படங்களுக்கு மேல் போடப்பட்டிருக்கும் வேட்டியை சுற்றி கொண்டு தன்னுடைய வீட்டிற்கு சென்றுள்ளார்.

கதறி அழுது கொண்டு தன்னுடைய தாயிடம் நிகழ்ந்தவற்றை கூறியுள்ளார். பதறிப்போன அந்த சிறுமியின் தாயார் உடனடியாக அப்பகுதி காவல் நிலையத்திற்கு சென்று புகாரளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் 3 குற்றவாளிகளும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.