சிக்கன், மட்டனை வெளுத்து விட்டு வெங்காயம் கேட்ட வாடிக்கையாளர்! தர மறுத்ததால் ஓட்டலில் ஏற்பட்ட பகீர் சம்பவம்!

கூடுதல் வெங்காயம் தராததால் ஆத்திரமடைந்த 3 பேர் ஓட்டலை அடித்து நொறுக்கிய சம்பவமானது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கேரள மாநில தலைநகரான திருவனந்தபுரத்தில் கய்தாமுக்கு என்னும் பகுதி அமைந்துள்ளது. அங்கு ஹோம்லி மீல்ஸ் உணவு விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு புதன்கிழமை இரவன்று மதுபோதையில் 3 பேர் சாப்பிட வந்துள்ளனர். அசைவ உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது கூடுதல் வெங்காயம் கேட்டுள்ளனர். ஆனால் அதற்கு ஹோட்டல் ஊழியர்கள் மறுத்துவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் ஹோட்டலை விட்டு வெளியே சென்றனர். 

பின்னர் ரவுடிகளை அழைத்துவந்து  ஹோட்டலில் நுழைந்து பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து ஹோட்டல் ஊழியர்கள் அப்பகுதி காவல்நிலையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் அமைப்பான டி.ஓய்.எஃப். ஐ பிரிவை சேர்ந்த 3 சேர் மீது புகார் அளித்துள்ளனர்.

ஆனால் இந்த புகாருக்கு அந்த அமைப்பு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது. இதனிடையே அந்த ஓட்டலின் சிசிடிவி கேமராக்களை ஆராய்ந்து காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவமானது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.