போதை ஏறணும்..! குளிர்பானத்தில் ஷேவிங் லோசனை கலந்து குடித்து பரலோகம் போன 2 பேர்! அறந்தாங்கி அதிர்ச்சி!

ஊரடங்கு உத்தரவினால் மது கிடைக்காத காரணத்தினால் 2 பேர் தற்கொலை முயற்சி செய்து கொண்ட சம்பவமானது புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 50,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 10,00,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்தியா முழுவதிலும் 2300 பேருக்கு இந்த கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை 157 பேர் குணமடைந்து இருப்பதாகவும், 57 பேர் உயிரிழந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் 411 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அவர்களுள் அதிகபட்சமாக சென்னையை சேர்ந்தவர்கள் 81 பேர் இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ்நாடு முழுவதிலும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் மதுப்பிரியர்கள், மது இன்றி தவித்து வரும் செய்திகள் உலா வருகின்றன. புதுக்கோட்டை மாநிலத்திலுள்ள கோட்டைபட்டினத்தை சேர்ந்தவர் அன்வர் ராஜா. இவருடைய நண்பர்களின் பெயர் அருண்பாண்டி மற்றும் அசன் மைதீன். 

இவர்கள் மூவரும் ஒன்றாக மது அருந்தும் பழக்கம் உடையவர்கள். கடந்த சில நாட்களாக மதுக்கடைகள் மூடப்பட்டுள்ளதால், மது இன்றி இவர்கள் மிகுந்த விரக்தியில் வாழ்ந்து வந்துள்ளனர். விரக்தியிலிருந்த இவர்களுக்கு சோடாவில் ஷேவிங் லோஷனை கலந்து குடித்தால் போதை வரும் என்ற தவறான செய்தி கிடைத்துள்ளது.

இதனால் இவர்கள் சோடாவில் நேற்று முன்தினம் இரவு ஷேவிங் லோஷன் கலந்து குடித்துள்ளனர். குடித்த சில நிமிடங்களிலேயே 3 பேரும் மயக்கம் அடைந்துள்ளனர். உடனடியாக அக்கம்பக்கத்தினர் அவர்களை பழல்மேல்குடி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அப்போது மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே அருண்பாண்டி மற்றும் அசன் மைதீன் ஆகியோர் உயிரிழந்து போயினர்.

ஆனால் அன்வர் ராஜா உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. உடனடியாக இந்த சம்பவம் குறித்து அப்பகுதி காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்தவுடன் விரைந்து வந்த காவல்துறையினர் தற்கொலை முயற்சி குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவமானது புதுக்கோட்டை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.