3 அடி உயரம் கொண்ட விஜய் ரசிகர்...! 3 அடி கொண்ட இளம் பெண்ணுடன் திருமணம்! எங்கு தெரியுமா?

3 அடி உயரமேயுள்ள இளம் ஜோடிகள் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ள சம்பவமானது  அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.


வேளாங்கண்ணியில் இயங்கி வரும் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளில் ஒருவர் ஏழுமலை. இவருக்கும் கொளப்பாடு கிராமத்தை சேர்ந்த சுகன்யா என்ற பெண்ணுக்கும் இன்று திருமணம் நடைபெற்றுள்ளது. இதில் என்ன ஆச்சரியம் என்றால் மணமக்கள் இருவரும் 3 அடி உயரமானவர்களே.

இருவருக்கும் மழை முத்துமாரியம்மன் கோவிலில் பெரியோர் முன்னிலையில் திருமணம் நடைபெற்றது. கொரோனா ஊரடங்கு காலமென்பதால் மன மக்கள் முகக்வசம் அணிந்திருந்தனர். மேலும் சுப நிகழ்ச்சிகளுக்கு 50 பேர் மட்டுமே கூடவேண்டும் என்ற விதிக்கு கட்டுப்பட்டு குறைவான உறவினர்களே கலந்து கொண்டனர்.

அவர்கள் அனைவரும் முக கவசம் அணிந்து கொண்டு, சமூக இடைவெளியை கடைபிடித்து மணமக்களை வாழ்த்தினர். 3 அடி உயரமான தம்பதியினருக்கு திருமணம் நடைபெற்றுள்ள செய்தியானது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.