ஆபத்தை உணரா அதிவேகம்! 3 பேர் உயிர் குடித்த ஆம்னி பஸ்! கள்ளக்குறிச்சி பரிதாபம்!

விழுப்புரம் மாவட்டம் தியாகதுருகம் பகுதியில் இன்று அதிகாலை வரை சென்ற லாரி மீது ஆம்னி பஸ் ஒன்று மோதிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆம்னி பஸ்ஸில் முன்னிருக்கைகளில் பயணம் செய்த மூவர் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.


இரவு வழக்கம் போல சென்னையிலிருந்து ஆம்னி பஸ் ஒன்று கோவை மாவட்டத்திற்கு புறப்பட்டது. சுமார் 35 பயணிகள் அவரும் வசதியுடன் அந்த பேருந்து அமைக்கப்பட்டிருந்தது. விழுப்புரம் மாவட்டத்தில் தியாகதுருகம் என்ற பகுதி அமைந்துள்ளது.

இதற்கு அருகே உள்ள பிரதிவிமங்கலம் பகுதியானது சென்னை- சேலம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இன்று அதிகாலை சுமார் ஐந்தரை மணி அளவில் ஆம்னி பஸ் இந்தப் பகுதிக்கு அருகில் படுவேகத்தில் சென்று கொண்டிருந்தது.

எதிர்பாராவிதமாக, ஓட்டுநரின் கட்டுப்பாட்டிலிருந்து ஆம்னி பஸ் விலகி தாறுமாறாக சென்று கொண்டிருந்தது. துரதிர்ஷ்டவசமாக முன்னே சென்றுகொண்டிருந்த லாரியின் மீது அதி வேகத்தில் மோதியது. ஆம்னி பஸ்ஸின் முன் பகுதி முழுவதும் சேதம் அடைந்தது. முன் இருக்கைகளில் அமர்ந்து வந்த மூவர் விபத்தில் சிக்கி உயிரிழந்தனர்.

மேலும் பேருந்தின் இடிபாடுகளில் சிக்கி 4 பேர் படுகாயமடைந்தனர். இந்த துயர சம்பவத்தின் தகவலை பொதுமக்கள் தியாகதுருகம் காவல்துறையினரிடம் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், இறந்தவர்களின் அடையாளத்தை கண்டறிந்தனர்.

நாகலூரை சேர்ந்த வினோத் குமார் என்பவரும் ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த முகம்மது ஜூனிபர் என்பவரும் விபத்தில் உயிரிழந்தவர்களாவர். மேலும் ஒருவரின் அடையாளத்தை காவல்துறையினர் தேடிக் கொண்டிருக்கின்றனர்.

இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். உயிருக்குப் போராடி வரும் நான்கு பேருக்கும் அதை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்று காவல்துறையினர் கூறினர்.

இந்த சாலை விபத்தினால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக நீடித்தது. இந்த சம்பவமானது தியாகதுருகம் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.