வெளிநாட்டில் இருந்த வேலையும் போச்சு..! ஆனால் நாடு திரும்பிய இளைஞர்கள் ஒரே நாளில் கோடீஸ்வரன் ஆன சம்பவம்! எப்படி தெரியுமா?

கொரோனா வைரஸினால் வாழ்வாதாரத்தை இழந்த தொழிலதிபர்கள் திடீரென்று பணக்காரர்களான சம்பவமானது துபாயில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.


கடந்த சில வாரங்களாக உலகம் முழுவதையும் கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. கிட்டத்தட்ட 73,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸ் தாக்குதலினால் இதுவரை உயிரிழந்துள்ளனர். சீனா நாட்டில் தொடங்கி, இத்தாலி, வடகொரியா, இந்தியா ஆகிய நாடுகளிலும் வேகமாக பரவ தொடங்கியுள்ளது.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் தங்களுடைய கைகளை சுத்தம் செய்யாமல் பொருட்களை தொடுவதிலிருந்து வேகமாக பரவுவதாக கூறப்படுகிறது. 13,40,000-க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் தாக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

கேரளாவை பூர்வீகமாக கொண்ட 3 இளைஞர்களான ஜிஜேஷ் கோரோதான், ஷாஜஹான் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் துபாய்க்கு சென்ற கார் ஓட்டுநர்களாக பணியாற்றி வந்தனர். கடனுக்கு கார் ஒன்றை வாங்கி சுற்றுலாவிற்காக பயன்படுத்தி வந்தனர்.

அங்கு சமீபகாலமாக கொரோனா வைரஸ் தாக்குதல் ஏற்பட்ட காரணத்தினால் சுற்றுலாத்துறை முற்றிலுமாக முடங்கியது. முடங்கிய காரணத்தினால் இவர்களுடைய தொழில் துவண்டு போக தொடங்கியது. ஒரு கட்டத்தில் வாங்கிய கடனை செலுத்த இயலாத நிலைக்கு 3 பேரும் சென்றனர். அப்போது, தங்களுடைய சொகுசு காரை விற்று கடன்களை அடைத்து மீண்டும் கேரளாவுக்கு திரும்புவதற்கு மூவரும் முடிவெடுத்தனர்.

அதற்கு ஒரு நாளுக்கு முன்னர் மூவரும் இணைந்து ஒரு லாட்டரி சீட்டை பெற்றனர். சொகுசு காரை விற்கின்ற நிலைக்கு சென்ற நேரத்தில் அந்த லாட்டரி சீட்டின் மூலம் 41 கோடி ரூபாய் பரிசு கிடைத்துள்ள செய்தி இவர்களுக்கு தெரிய வந்தது.

இந்த இன்ப அதிர்ச்சி குறித்து 3 பேரும் கூறுகையில், "சொகுசு காரை விட்டு கேரளாவுக்கு திரும்ப சென்றுவிடலாம் என்ற முடிவெடுத்த தருணத்தில் இந்த லாட்டரி சீட்டு பம்பர் பரிசு எங்களை பெரிதளவில் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இனி எங்கள் தொழில் எந்தவித பிரச்சனையுமின்றி நடக்கும் என்று நம்புகிறோம்" என்று கூறியுள்ளனர்.

இந்த செய்தியானது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.