குளித்துக் கொண்டிருந்த 15 வயது மாணவி..! மறைந்திருந்து 3 பேர் செய்த நினைத்து பார்க்க முடியாத செயல்..! வாட்ஸ்ஆப்பில் வெளியான பகீர் வேலூர் சம்பவம்!

15 வயதுடைய சிறுமி குளிக்கிற வீடியோவை அச்சிறுமிக்கு அனுப்பி ஆசைக்கு இணங்குமாறு மிரட்டிய மூன்று இளைஞர்களால், விபரீத முடிவெடுத்த அந்த சிறுமி உயிரிழந்த சம்பவம் வேலூர் அருகே மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


வேலூர் மாவட்டம் பாகாயத்தை அடுத்துள்ள துத்திப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர், அப்பகுதியில் அமைந்துள்ள அரசுப் பள்ளியில் படித்து வருகிறார். இந்நிலையில், அந்த சிறுமி, தனது வீட்டின் பின்புறம் உள்ள திறந்தவெளிக் குளியலறையில் குளித்துக்கொண்டிருந்தபோது, அதே பகுதியைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் மறைந்திருந்து செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். அதன் பின்னர், அந்த வீடியோவை சிறுமிடம் காண்பித்து ஆசைக்கு இணங்குமாறு மிரட்டியுள்ளனர்.

அந்த வீடியோவை பார்த்த அந்த பெண் மிகவும் அதிர்ந்து போனார். பின்னர் அந்த இளைஞர்களிடம் அதனை டெலிட் பண்ணச் சொல்லி கெஞ்சியும் உள்ளார். ஆனால் அந்த இளைஞர்கள் ஐந்தாயிரம் ரூபாய் பணம் கேட்டும் இல்லை என்றால் இணையத்தில் வீடியோவை பதிவி செய்துவிடுவதாக மிரட்டியும் உள்ளார்கள்.

இதனால், அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து வெளியில் கூற முடியாமல் தற்கொலை முடிவுக்குத் தள்ளப்பட்டார். இதனையடுத்து சமையில் அறைக்கு சென்று அங்கு இருந்த மண்ணெய் எடுத்து உடலில் ஊற்றித் தீ வைத்துக்கொண்டு தெருவுக்கு வந்தார். இதைப் பார்த்து திடுக்கிட்ட அப்பகுதி மக்கள், மாணவியைக் காப்பாற்றுவதற்காக முயற்சிசெய்தனர். அங்குள்ள ஒரு கோயில் அருகில் சென்று சுருண்டு விழுந்தார் மாணவி.

அப்போது பொதுமக்கள் அனைவரும் தீயை அணைத்து வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றனர். அங்கு 90 சதவிகித தீக்காயங்களுடன் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சிறுமி, உயிர் பிழைப்பது சந்தேகம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பின்னர் மணைவி தெரிவித்த அந்த துயரச் சம்பவம் குறித்து மாணவியின் தந்தை பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

புகாரின் அடிப்படையில், காவல்துறையினர் மருத்துவமனைக்குச் சென்று சிறுமியின் வாக்குமூலத்தை வீடியோவாகப் பதிவுசெய்தனர். பின்னர் விசாரணையை தொடங்கினர். மேலும், அந்த வீடியோ வாக்குமூல வீடியோவில் மாணவி தெரிவித்து என்னவென்றால்,அந்த சிறுமி குளிக்கிறதை வீடியோ எடுத்து அப்பெண்ணின் சித்தப்பா செல்போனுக்கு போன் பண்ணி ”உன்னையும் உன் சித்தப்பனையும் பழிவாங்குறதுக்காக உனக்கே தெரியாம ஒரு வீடியோ எடுத்திருக்கிறோம்” என்று கூறியுள்ளார்கள் அந்த மூன்று இளைஞ்ர்கள்.  

மாணவியின் வாக்குமூலத்தை வைத்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஆபாச வீடியோ எடுத்து பாலியல் தொல்லை கொடுத்த பூனைக்கண்ணன் என்கிற ஆகாஷ், பாலாஜி, கணபதி என்கிற தாமஸ் ஆகிய மூன்று பேரையும் கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளர். மேலும், இந்த சம்பவம், வேலூரில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.