ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டுக்கு பெட்ரோல் குண்டுடன் வந்த 2 பேர்.! அதிர வைக்கும் சிசிடிவி காட்சி!

சென்னையில் உள்ள துக்ளக் ஆசிரியர் மற்றும் ஆடிட்டர் குருமூர்த்தியின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச முயற்சி செய்த பெரியார் திராவிடர் கழகத்தை சார்ந்த மூன்று பேரை கைது செய்துள்ளனர்.


துக்ளக் பத்திரிகையின் ஆசிரியராக ஆடிட்டர் குருமூர்த்தி பணியாற்றி வருகிறார். இவர் சென்னை மயிலாப்பூரில் உள்ள தியாகராஜ புரத்தில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் துப்பாக்கி ஏந்திய போலீசார் காவல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அதிகாலை 3 மணி அளவில் 3 மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டின் அருகே இறங்கி பெட்ரோல் குண்டுகளை வீச முயன்றனர்.

அச்சமயம் அங்கிருந்த நாய் குரைத்ததால் காவல் பணியில் ஈடுபட்டிருந்த ஆயுதப்படை போலீசார் மணிகண்டன் என்பவர் நிலைமையை அறிந்து அவர்களை பிடிக்க முயற்சி செய்தார். எனினும் அந்த மர்ம நபர்கள் தப்பித்து ஓடி சென்று விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக மயிலாப்பூர் காவல் நிலையத்தைச் சேர்ந்த போலீசார்கள் விசாரணை மேற்கொண்டனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்த பம்மல் தமிழ் என்பவரையும், அயனாவரத்தில் சேர்ந்த குமார், ஜனர்தனன் ஆகியவற்றையும் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் 3 பேரை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள்களை போலீசார் கைப்பற்றினர்.