காஷ்மீரில் தீவிரவாதிகள் காட்டுமிராண்டித்தனம்! தமிழக வீரர் வீர மரணம்!

காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கி சண்டையில் தமிழகத்தை சேர்ந்த வீரர் ஒருவர் உட்பட மூன்று சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.


ஜம்மு காஷ்மீரில் உள்ள குப்வாரா மாவட்டத்தில் உள்ள கிரால்குண்ட் வங்கம் - காசியாபாத் என்ற இடத்தில் சிஆர்பிஎஃப் வீரர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்தனர் அந்த நேரத்தில் பயங்கரவாதிகள்  இவர்கள் மீது தாக்குதல் நடத்தினர். பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த வீரர் ஒருவர் உட்பட 3 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீர மரணம் அடைந்துள்ளனர். பதிலுக்கு சிஆர்பிஎஃப் வீரர்கள் நடத்திய தாக்குதலில் பயங்கரவாதிகளில் ஒருவர் சுட்டு வீழ்த்தப்பட்டார்.

பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் அஸ்வினி குமார் யாதவ், சந்திரசேகர், சந்தோஷ் குமார் ஆகிய 3 சிஆர்பிஎஃப் வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். இவர்களில் சந்திரசேகர் என்பவர் தமிழ்நாட்டில் உள்ள தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள மூன்று வாய்க்கால் பகுதியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் உயிர் தியாகத்திற்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். 

துப்பாக்கிச் சூடு நடந்த பகுதியில் 14 வயது சிறுவனின் சடலம் கிடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று காஷ்மீரின் இதே மாவட்டத்தில் ஹந்த்வாரா என்ற இடத்தில் பயங்கரவாதிகளுடன் நடைபெற்ற மோதலில் கர்ணல் உட்பட 5 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.