செல்போன் சார்ஜர் பின்னை வாயில் வைத்து குழந்தை! மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்ட பரிதாபம்! பிறகு நேர்ந்த விபரீதம்!

உத்தரபிரதேச மாநிலத்தில் மீரட் பகுதியில் 2 வயது குழந்தை செல் போன் சார்ஜரை வாயில் வைத்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


டெல்லியை சேர்ந்த முஸ்தபாபட் மற்றும் ரைசா தம்பதியனருக்கு 2 வயதில் "ஷேவர்" என்ற பெண் குழந்தை உள்ளது. ரைசா கடந்த சனிக்கிழமை அன்று மீரட்டில் உள்ள தன்னுடைய அம்மா வீட்டிற்கு மகள் ஷேவர் உடன் சென்றுள்ளார். 

அப்போது ரைசாவின் வீட்டில் யாரோ ஒருவர் செல் போனிற்கு சார்ஜ் போட்டு எடுத்த பின்பு ஸ்விச்ச்சை ஆப் செய்யாமல் விட்டு சென்றுள்ளனர். அங்கு விளையாடி கொண்டிருந்த சிறுமி ஷேவர் சார்ஜ்ர் பின்னை தனது வாயில் வைத்துள்ளார்.  அதனை வாயில் வைத்த அடுத்த நொடியில் சிறுமியின் உடலில் அதிவேக மின்சாரம் பாய்ந்து உள்ளது. சிறுமி சம்பவ இடத்திலேயே உயிர் இழந்துள்ளார்.

இதனை பற்றி ஜஹாங்கீராபாத் போலீஸ் அதிகாரி அகிலேஷ் பிரதான் பேசுகையில், "சிறுமியின் குடும்பத்திலிருந்து எவரும்  இதுவரை புகார் ஏதும் அளிக்க்கவில்லை, அப்டி அவர்கள் அளித்தால் சட்டப்படி தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்", என்று கூறினார்.