லண்டன்: பெருத்த மார்பகம் இருந்தும் அதன் எடை தாங்காமல் பெண் ஒருவர் வேதனை தெரிவித்துள்ளார்.
38KK சைஸ் மார்பகம்..! இரவெல்லாம் அவஸ்தை..! 29 வயது இளம் தாய்க்கு ஏற்பட்டுள்ள விபரீத பிரச்சனை!
இன்றைய சூழலில், பெண்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கு பெரிய அளவில் மார்பகம் வேண்டும் என விரும்புவது வாடிக்கை. எப்பாடு பட்டேனும் தங்களது மார்பகத்தை பெரியதாக, எடுப்பானதாக மாற்ற, அவர்கள் அறுவை சிகிச்சை செய்துகொள்ளவும், மருந்து, மாத்திரைகள் சாப்பிடவும் பலர் தயாராக உள்ளனர். ஆனால், இவர்களில் இருந்து வித்தியாசமாக இங்கிலாந்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மாறுபட்டுள்ளார்.
நார்த் யார்க்சைர் பகுதியை சேர்ந்த டேனியல் சுலைவன் என்ற 29 வயது பெண், இயற்கையிலேயே நல்ல பெரிய, எடுப்பான மார்பகத்தை பெற்றுள்ளார். இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ள நிலையில், சமீப நாட்களாக பருவ வயதில் இருந்ததைவிட மார்பகம் சற்று வளர்ந்துவிட்டதாக, டேனியல் கருதுகிறார். இது எப்படி தெரியும் என்றால், அன்றாட வேலைகளைச் செய்ய முடிவதில்லை, மார்பகம் பெரியதாக உள்ளதால் இடுப்பு, முதுகு மற்றும் மூட்டு வலி வருவதாக, அவர் கூறுகிறார்.
இப்படியான வலிகளுடன் இரவு படுக்கைக்குச் சென்றால் உருண்டு, திரளும் மார்பகத்தை வைத்துக் கொண்டு, நிம்மதியாக உறங்கக்கூட முடியவில்லை. படுத்தால் நெஞ்சின் மேலே யாரோ பாறாங்கல் போட்டு அழுத்துவது போல உள்ளதாகவும், டேனியல் வருந்துகிறார்.
பெருத்த மார்பகம் இருந்தும், கடும் மன உளைச்சலால் அவதிப்படும் டேனியல், இதற்காக மருத்துவர்களை ஆலோசித்துள்ளார். டேனியலை பரிசோதித்த மருத்துவர்கள் எடுப்பான மார்பகத்தை சற்று வெட்டி எடுத்து, அளவை குறைத்துவிடலாம் என்று கூறியுள்ளனர். எனினும், இந்த அறுவை சிகிச்சைக்குத் தேவையான பண வசதி இல்லை என்பதால், நண்பர்கள், உறவினர்களிடம் இருந்து, போதிய நிதி திரட்டும் முயற்சியில் டேனியல் இறங்கியுள்ளார். எப்படியேனும் தனது மார்பகத்தை குறைத்து, சிக்கென்ற அழகைப் பெறுவேன் என, டேனியல் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.