செவ்வாய் தோஷத்தால் திருமண தடை..! ஆசிரியை எடுத்த விபரீத முடிவு

திருமணம் கைகூடாத விரக்தியில் ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவமானது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


புதுச்சேரியில் ரெயின்போ நகர் எனுமிடம் அமைந்துள்ளது. இதற்குட்பட்ட 7-வது குறுக்கு தெருவில் திருக்காமு என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மகளின் பெயர் கலாரஞ்சினி. ரஞ்சினியின் வயது 29. முத்தியால்பேட்டையில் அமைந்துள்ள பள்ளி ஒன்றில் ஆசிரியராக ரஞ்சினி பணியாற்றி வந்தார்.

ரஞ்சனியின் ஜாதகப்படி அவருக்கு செவ்வாய் தோஷம் இருந்துள்ளது. இந்த தோஷத்தை வீடுகட்டும் வகையிலான ஜாதகத்தை ரஞ்சனியின் பெற்றோரால் கண்டுபிடிக்க இயலவில்லை. இதனால் ரஞ்சனியின் திருமணம் தடைப்பட்டு கொண்டே போனது. இதனால் விரக்தி அடைந்த ரஞ்சனி தன் பெற்றோரிடம் நேற்று முன்தினம் மாலை கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். "இந்த ஜென்மத்தில் எனக்கு திருமணம் செய்ய மாட்டீர்கள். பதிலாக கருமாரி தான் செய்வீர்கள்" என்று தன் ஆத்திரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

திருமணமாகாத விரக்தியில் பெற்றோரை கடுமையாக கடிந்துள்ளார். பின்னர் தன்னுடைய அறைக்கு சென்று உள் தாழிட்டுள்ளார். நெடுநேரமாகியும் இரவு சாப்பாட்டிற்கு கலாரஞ்சினி வராததால் சந்தேகித்த பெற்றோர் அவருடைய அறையில் பார்த்தபோது, அவர் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இதனைக்கண்டு பதறிப்போன உறவினர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். 

திருமணம் ஆகாத விரக்தியில் ஆசிரியை தற்கொலை செய்துகொண்ட சம்பவமானது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.