பாலியல் தேவைகளை பூர்த்தி செய்வதில் அவர் தனித்துவமானவர்..! 72 வயது நபரிடம் மயங்கிய 27 வயது பெண்..! அதற்கு அவர் கூறிய கிளுகிளு காரணம்!

72 வயது நபரை திருமணம் செய்து கொள்ள உள்ள 27 வயது பெண் எங்களின் பாலியல் வாழ்க்கை தனித்துவமானது என்று கூறியுள்ளார்.


அமெரிக்காவில் 45 வயது இடைவெளி கொண்ட 72 வயது ஆண் நபரை 27 வயது பெண் ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொள்ள உள்ளார். 27 வயதாகும் ராச்சல் என்பவர் 72 வயதாகும் ஜான் பென்சிரா என்பவரை விரைவில் நிச்சயதார்த்தம் செய்து கொள்ள உள்ளார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய 27 வயதாகும் ராச்சல், கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு ஜானை பாதுகாப்பு நிறுவனத்தில் காவலராக பணிபுரிந்து போது பார்த்ததாகவும் அதன் பிறகு நன்றாக பழகி வந்த நாங்கள் ஸ்ட்ரைப் கிளப் ஒன்றில் தங்களது காதலை வெளிப்படுத்திக் கொண்ட தாகவும் அவர் கூறினார்.

என்னுடைய தாய் தந்தையை விட அவருக்கு வயது அதிகமாக இருந்தாலும் வயது என்பது வெறும் எண் மட்டுமே. எங்களுக்குள் மிகவும் நெருக்கமான உறவு உள்ளது. அவரை யாருடனும் ஒப்பிட முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். அவர் நடந்து கொண்ட விதம் அனைத்தும் எனக்கு மிகவும் பிடித்துவிட்டது . எங்களுக்குள் தனித்துவமான பாலியல் வாழ்க்கை உள்ளது. அதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை எனவும் அவர் கூறியிருந்தார்.

ஆரம்பத்தில் ஜான் விவாகரத்துக்காக காத்திருந்ததால் இரண்டு ஆண்டுகள் வரை காத்திருந்த இந்த ஜோடி தற்போது தான் காதலர்களாக மாறியுள்ளனர். இவர்களின் காதல் விஷயத்தை அறிந்து ஜானின் 28 வயது மகன் மற்றும் 23 வயது மகள் கேட்டு மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால் ராச்சலின் குடும்பத்தினர்கள் இவர்களின் காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. பின்னர் ஜானை நேரில் சந்தித்தபோது ராச்சல் குடும்பத்தினருக்கும் பிடித்து விட்டதாக கூறப்படுகிறது.

தற்போது நிலவி வரும் கொரோனா வைரஸ் தொற்றினால் தங்களின் திருமணம் எப்போது நடக்கும் என்று சொல்ல முடியாது என்று இந்த ஜோடி கூறிவருகின்றனர். இதனால் தற்போதைய சூழலில் ராச்சல் தனது மகனுடன் ஒரு குடியிருப்பிலும், அதேபோல ஜானும் தங்கள் திருமணத்திற்குப் பிறகு தங்கள் தங்குவதற்கு ஒரு வீட்டை கட்டி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த ஜோடி இருவரது குடும்பத்தினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டாலும் நெட்டிசன்கள் பலர் இந்த ஜோடியிணை கிண்டல் செய்து வருகின்றனர். இதைப்பற்றி எல்லாம் நாங்கள் கண்டுகொள்ளப் போவதில்லை எனவும் அந்த ஜோடியினர் கூறி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.