நள்ளிரவு..! 20 வயது கர்ப்பினி மனைவியை உயிரோடு கொளுத்திய கொடூர கணவன்! பதற வைக்கும் காரணம்!

டெல்லி உணவு ருசியாக இல்லை என்ற காரணத்தால் கர்ப்பிணி மனைவியை கணவனே தீயிட்டு கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


டெல்லியில் உள்ள சங்கம் விகார் பகுதியை சேர்ந்தவர் விவேக் குமார் (26 வயது). இவரது மனைவி கர்ப்பமாக உள்ளார்.  இந்நிலையில், செப்டம்பர் 8ம் தேதியன்று இரவு வீட்டிற்கு வந்த விவேக் குமார், பசியாக உள்ளதால் ஏதேனும் சமைத்து தரும்படி மனைவியை கேட்டுள்ளார்.

அவரும் அந்த நேரத்தில் முடிந்ததை சமைத்துக் கொடுத்துவிட்டு, உறங்கச் சென்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், உணவில் எந்த ருசியும் இல்லை என்பதால் ஆத்திரம் அடைந்த விவேக் குமார், மனைவியுடன் வாக்குவாதம் செய்துள்ளார்.

பிறகு, நள்ளிரவு 1.30 மணியளவில் உறங்கிக் கொண்டிருந்த மனைவி மீது தீ வைத்துக் கொளுத்த முயன்றுள்ளார். அதிர்ஷ்டவசமாக அந்த பெண், 20 சதவீத தீக்காயங்களுடன் உயிர் தப்பி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதன்பேரில், போலீசார் விவேக் குமாரை கைது செய்தனர்.  

கர்ப்பிணி மனைவி என்றும் பாராமல் விவேக் செய்த கொடூரம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.