தடுத்து பார்த்தேன்! முடியவில்லை! முன்னாள் காதலன் மீது பிரபல நடிகை பகீர் பாலியல் புகார்!

மும்பையைச் சேர்ந்த 26 வயது நடிகை தன்னை தனது முன்னாள் காதலன் பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக காவல்துறையில் புகார் அளித்துளார்.


மீ டூ இயக்கம் வந்த பின் பல நடிகைகள் தங்களுக்கு நேர்ந்த அவலங்களை தைரியமாக வெளிப்படுத்தி வருகின்றனர். அந்த வரிசையில் மும்பையைச் சேர்ந்த 26 நடிகை தனது முன்னாள் காதலன் மீது புகார் அளித்துள்ளார். 

நொய்டாவைச் சேர்ந்த 34 வயது நடிகனும் மாடலுமான்  நபரை கடந்த 2017-ஆம் ஆண்டுஒரு ஷூட்டிங்கில் சந்தித்தாக அந்தப் பெண் தெரிவித்த்துள்ளார். அவர்களிடையேயான பழக்கம் வளர்ந்து நெருங்கிய  போது தன்னை பார்க்க அந்த நடிகர் தினமும் நொய்டாவில் இருந்து மும்பைக்கு வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

திருமணம் செய்துகொள்வதாக ஆசை காட்டி தன்னை அந்த நபர் பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அந்த நடிகை கூறியுள்ளார். இந்நிலையில் நண்பர்களிடம் இருந்து விலகி இருக்குமாறும், வேறு ஆண் நடிகர்களுடன் நடிப்பதை தவிர்க்குமாறும் அந்த நபர் தன்னை கட்டாயப்படுத்தியதாகவும் அந்த நடிகை தெரிவித்துள்ளார். 

அதை தான் ஏற்காததால் அந்த நபர் தன்னை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதாகவும், சரமாரியாகத் தாக்கியதாகவும் தெரிவித்துள்ள அந்த நடிகை அந்த நபரின் கொடுமைகள் பொறுக்க முடியாத நிலையில் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகக் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் தலைமறைவாகியுள்ள் அந்த நடிகனை தேடி வருகின்றனர்.