செல்போனை சார்ஜ போட்டு குளியல் தொட்டிக்குள் இறங்கிய இளம் பெண்! சடலமாக மீட்கப்பட்ட கொடூரம்! அதிர வைக்கும் காரணம்!

குளியல் தொட்டியில் மின்சாரம் பாய்ந்ததில் 26 வயதான இளம்பெண் உயிரிழந்த சம்பவமானது ரஷ்யாவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


ரஷ்ய நாட்டின் தலைநகர் மாஸ்கோ. இந்த நகரில் கிராவோ-செபட்செக் எனும் இடம் அமைந்துள்ளது. இங்கு 26 வயதான என்ஜினியா என்ற பெண் வசித்து வந்தார். அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் கணக்காளராக பணியாற்றி வந்தார். 

நேற்று காலை வழக்கம்போல குளிப்பதற்காக என்ஜினியா சென்றார். அப்போது தன்னுடைய மொபைல் போனுக்கு குளியல் தொட்டி அருகிலேயே சார்ஜ் போட்டிருந்தார். தொட்டி முழுவதும் தண்ணீரை நிரப்பி விட்டு என்ஜினியா குளிப்பதற்கு தொட்டிக்குள் சென்றுள்ளார்.

அப்போது எதிர்பாராவிதமாக மொபைல் போன் சறுக்கி தொட்டிக்குள் விழுந்தது. இதனால் அடுத்த நொடியே என்ஜினியாவின் உடலில் மின்சாரம் பாய்ந்தது. சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.

என்ஜினியா குளிக்க சென்று ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆனவுடன் அவருடைய தாயார் சந்தேகித்தால் உடனடியாக குளியல் அறைக்கு சென்று பார்த்த போது அவருடைய ஆசை மகள் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியில் உறைந்தார்.

உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் அறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்துள்ள காவல்துறையினர் இந்த விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

இந்த சம்பவமானது மாஸ்கோ நகரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.