ஒரு நாளைக்கு 4 ஃபுல்..! 25 வருட குடிப்பழக்கத்தை ஒரே நாளில் விட்ட நடுத்தர வயது பெண்! டாக்டர்களையே மிரள வைத்த காரணம்!

லண்டன்: 25 ஆண்டு மதுப்பழக்கத்தை கைவிட 43 வயது பெண் செய்த செயல் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


பிரிட்டனின் ரைட் பகுதியை சேர்ந்தவர் சாரா கூம்ப்ஸ். இவர் கணவனை பிரிந்து வாழ்வதால், மன அழுத்தத்தை போக்க, கடந்த 25 ஆண்டுகளாக, ஒயின் குடித்து வந்திருக்கிறார். அதாவது, தினசரி 4 பாட்டில்கள் ஒயின் குடித்தால்தான் அவருக்கு நிம்மதி. அதுவும் காலை 8 மணிக்கு படுக்கையில் இருந்து எழுந்ததும் ஒரு பாட்டில் ஒயின் குடித்துவிட்டுத்தான் அவரது வேலையை செய்ய தொடங்குவார். ஆனால், நாளுக்கு நாள் இந்த பழக்கத்தை அவரால் விட முடியவில்லை.  

  இந்த குடிப் பழக்கத்தால் இவரை குழந்தை வளர்ப்பதற்கு சரியில்லாதவர் எனக் கூறி, உறவினர்கள் போலீசில் புகார் செய்திருக்கின்றனர். இருந்தாலும் மன அழுத்தம் தாளாத சாரா கூம்ப்ஸ், சென்ற ஆண்டு, சாலையில் சென்ற கார் மீது விழுந்து தற்கொலைக்கு முயன்றார். ஆனால் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட அவர் மருத்துவ சிகிச்சை பெற்றார். அதேசமயம், அவரது மகனை பராமரிக்க ஆள் இல்லாததால் உடனடியாக காப்பகத்தில் சேர்க்கப்பட்டான். இந்த நிகழ்வால் மனம் வருந்திய சாரா, தனது குடிப்பழக்கத்தை கைவிட தீர்மானித்தார். இதன்படி, 10 நாட்கள் தொடர்ந்து, தனது மனதிற்கு, குடிப்பழக்கத்தின் தீமை பற்றி எடுத்துச் சொல்லி, அதற்காக கடிதம் ஒன்றையும் எழுதி படித்து வந்துள்ளார். இதன்பேரில், தற்போது குடிப்பழக்கத்தை நிரந்தரமாக சாரா கைவிட்டுவிட்டார்.  

எத்தனையோ மருந்து மாத்திரைகளை முயற்சித்தபின் குடிப்பழக்கத்தை கைவிட முடியாமல் தவிப்பவர்கள் மத்தியில் வெறும் கடிதம் எழுதி தானே பிரச்னையை சரிசெய்துகொண்ட சாராவின் முயற்சி பலராலும் பாராட்டப்படுகிறது.